திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பாக்யஸ்ரீ போர்ஸ்?

சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படம் குறித்து...

News image

பாக்யஸ்ரீ போர்ஸ்

Updated On :15 பிப்ரவரி 2026, 4:41 pm IST

நடிகர் சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பராசக்தி திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிபி ரஜினியின் 173வது திரைப்படத்தை இயக்குகிறார்.

மேலும், இயக்குநர் வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் கூட்டணி இணையலாம் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், தாய் கிழவி திரைப்படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் சொன்ன கதை சிவகார்த்திகேயனுக்கு பிடித்ததாகவும் இதனை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இப்படம் மதுரையில் நடக்கும் கிராமப் பின்னணி கதையாக உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இது உறவுகளை மையப்படுத்திய கதையாகவும் இருக்கலாம் எனத் தெரிகிறது.

தற்போது, இப்படத்தின் கதாநாயகியாக நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் இணைந்துள்ளதாகவும் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணனும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.