
கமல் - 237 என்ன ஆனது?
கமல் - 237 குறித்து...

கமல்ஹாசன், அன்பறிவு
நடிகர் கமல் ஹாசனின் 237-வது திரைப்படத்தின் அப்டேட்கள் எதுவும் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் கமல்ஹாசனின் 237-வது திரைப்படத்தை சண்டைப் பயிற்சியாளர்களான அன்பு, அறிவ் சகோதரர்கள் இயக்குகிறார்கள். இப்படம் ஏஐ தொழில்நுட்ப பின்னணியில் அறிவியல் புனைகதையாக உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு திறமையானவர்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக முழுக்கவே தொழில்நுட்ப கலைஞர்களை மலையாள சினிமாவிலிருந்து கமல்ஹாசன் களமிறக்கியுள்ளார்.
இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சுனில் கே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஆடுஜீவிதம் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இசையமைப்பாளர் - ஜேக்ஸ் பிஜாய். தற்போது, தென்னிந்திய சினிமாவில் அதிகம் பேசப்படும் இசையமைப்பாளராக பிஜாய் உருவாகியுள்ளார். எடிட்டர் - ஷமீர் கேஎம், கலை இயக்குநராக வினேஷ் பங்கலான் (லக்கி பாஸ்கர், லோகா) ஆகியோரும் இணைந்துள்ளனர்.
இதைவிட, மலையாள சினிமாவின் மிக வெற்றிகரமான திரைக்கதை எழுத்தாளரான ஷ்யாம் புஸ்கரன் இப்படத்தின் திரைக்கதையை எழுதுகிறார். இதனால், தொழில்நுட்ப ரீதியாக பலமான கூட்டணியை கமல் அமைத்திருக்கிறார்.
ஆனால், இப்படம் குறித்து வேறு எந்த அப்டேட்களும் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட சிறப்பு நாள்களிலும் கமல் - 237 குறித்து அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. ஒருவேளை, முன்தயாரிப்பு பணிகளால் அறிவிப்புகளில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





