நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு விடியோ கவனம் பெற்றுள்ளது.
அபூர்வ ராகங்கள் திரைப்படத்திலிருந்து இணைந்து நடிக்க ஆரம்பித்த ரஜினிகாந்த், கமல் ஹாசன் கூட்டணி பல வெற்றிப்படங்களில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து 70-களின் தமிழ் சினிமாவில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தினர்.
பின், இருவருக்கும் உருவான வணிகம் மற்றும் நட்சத்திர பிம்பங்களால் தனித்தனியே நடிக்க ஆரம்பித்தனர். தற்போது, இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் 47 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர்.
இந்திய சினிமாவில் வேறு எந்த மொழியிலும் நிகழாத சாதனையாக 50 ஆண்டுகளாக சிறந்த நடிகர்களாக இருக்கும் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இருவருமே ரூ. 150 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள் என்பதால் மிகப்பெரிய படமாகவும் உருவாகவுள்ளது.
இதன் அறிமுக புரோமோ வெளியாகி ரசிகர்களிடம் உற்சாகத்தை அளித்துள்ளது. அந்த விடியோவில் காட்சிகளும் வசனங்களும் ரசனையாக எடுக்கப்பட்டுள்ளன.
முக்கியமாக, புரோமோவின் அறிமுகத்திலேயே இயக்குநர் நெல்சன் இடம்பெறும் காட்சியில் அவருக்கு பின்புறம் தி காட்பாதர் (the godfather), ஒன்ஸ் அபான் தி டைம் இன் அமெரிக்கா (once upon the time in america) ஆகிய திரைப்படங்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
இதற்குக் காரணம், நடிகர் கமல் ஹாசனுக்கு மிகப் பிடித்த திரைப்படங்களில் ஒன்று தி காட்ஃபாதர். இப்படத்தில் நடித்த மார்லன் பிராண்டோவின் நடிப்பை கமல் பலமுறை புகழ்ந்து பேசியுள்ளார்.
அதே போல, நடிகர் ரஜினிகாந்த்தை மிகவும் பாதித்த திரைப்படங்களில் ஒன்று, ஒன்ஸ் அபான் தி டைம் இன் அமெரிக்கா. இப்படத்தின் கதை சொல்லல் முறையும், அதன் வலியும் தன்னை நிறைய யோசிக்க வைத்ததாக கூறியுள்ளார்.
இதனாலேயே, புரோமோவில் இந்த 2 திரைப்படங்களின் புகைப்படங்களும் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. சுவாரஸ்யமாக, இந்த இரண்டு திரைப்படங்களும் கேங்ஸ்டர் பின்னணியில் எழுச்சியையும் இழப்புடன் கூடிய வாழ்வையுமே பேசுகின்றன. இந்த புரோமோவிலும் ரஜினி, கமல் கோட் சூட் உடையில் கேங்ஸ்டர் போன்றே தோற்றமளிக்கின்றனர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
கமல் - ரஜினி திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது?
பிலிம் கேமராவில் எடுக்கப்படும் ரஜினி - கமல் திரைப்படம்?

உலகங்கள் ஒன்றிணையும் போது... ரஜினி - கமல் திரைப்படத்தை தயாரிக்கும் ரெட் ஜெய்ண்ட்!

80-களின் தோற்றத்தில் ரஜினி, கமல்?
வீடியோக்கள்

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

