விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மகளே என் மருமகளே தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
மகளே என் மருமகளே தொடர் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
இந்தத் தொடரில் ரேஷ்மா பசுபுலேட்டி மாமியாராகவும் வர்ஷினி சுரேஷ் மருமகளாகவும் நடிக்கின்றனர். நாயகனாக நடிகர் அவினாஷ் நடிக்கிறார்.
மருமகள் மீது மிகுந்த பாசம் கொண்ட மாமியார், மாமியார் மீது அதிக அன்பு கொண்ட மருமகள், இருவருக்கு இடையே நிகழும் பாசப் பிணைப்பை மையப்படுத்தி இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மகளே என் மருமகளே தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாகவும், அதற்கான படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.
இந்தத் தொடரின் பரபரப்பான கிளைமேக்ஸ் காட்சிகள் கூடிய விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்தத் தொடர் ஆரம்பிக்கப்பட்டு 6 மாதங்களே ஆன நிலையில், குறுகிய காலத்தில் நிறைவடையவுள்ளது, இந்தத் தொடரை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Summary
It has been reported that the series Makale En Marumakele, which airs on Vijay TV, will soon end.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











