உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

4 திரைப்படங்களில் ஒப்பந்தமான விக்ரம்!

விக்ரமின் புதிய திரைப்படங்கள் குறித்து...

விக்ரம்

Published On :

நடிகர் விக்ரம் அடுத்தடுத்து 4 திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தங்கலான், வீர தீர சூரன் திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அஷ்வின் மடோன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பார் என அறிவிப்பு வெளியானது. ஆனால், அப்படம் சில காரணங்களால் தாமதமாகி வருகிறது.

இதற்கு முன்பாக, இயக்குநர் பொடி கே ராஜ்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார். இப்படம் மதுரையைப் பின்னணியாக வைத்து உருவாகிறது. இதற்கான, முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், நடிகர் விக்ரம் அடுத்தடுத்த 4 திரைப்படங்களில் வித்தியாசமான கதைக்களங்களில் நடிக்க உள்ளதாகத் தெரிவித்ததுடன் கடந்த ஓராண்டாக நல்ல கதைகளைக் கேட்டு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் அறிவிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.