உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

அரசன் படத்திலிருந்து விலகலா? விஜய் சேதுபதி பதில்!

வெற்றிமாறன் இயக்கும் அரசன் திரைப்படம் குறித்து...

Vijay Sethupathi poster for arasan film

விஜய் சேதுபதி போஸ்டர். - படம்: எக்ஸ் / விஜய் சேதுபதி

Published On :

வெற்றிமாறன் இயக்கும் அரசன் திரைப்படத்தில் இருந்து தான் விலகுவதாகக் கூறும் கருத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

நடிகர் சிம்புவை நாயகனாக வைத்து அரசன் திரைப்படம் உருவாகி வருகிறது.

வடசென்னை திரைப்படத்தின் கதையுடன் தொடர்புடைய படமாக அரசன் உருவாகிறது.

படப்பிடிப்பும் சென்னையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மதுரையில் முதல்கட்ட படப்பிடிப்பை நடத்த வெற்றி மாறன் திட்டமிட்டார்.

தற்போது, இரண்டாம் கட்டமாக படப்பிடிப்பு சென்னையில் விரைவில் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விஜய் சேதுபதியிடம் அரசன் படத்திலிருந்து விலகலா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த விஜய் சேதுபதி, “அப்படி எல்லாம் இல்லை. எனக்கே தெரியாது இப்படியான செய்திகள். வதந்திகள் மிக வேகமாக பரவுகின்றன. இதையெல்லாம் நம்பாதீர்கள்” என்றார்.

சென்னையில் நடைபெற இருக்கும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் சிம்பு - விஜய் சேதுபதி தொடர்பான காட்சிகள் படமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தயாரிப்பாளர் தாணு தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் ஆண்ட்ரியா, சைத்ரா ஆச்சர் நடிக்கிறார்கள்.

வட சென்னையின் உலகில் உருவாகும் இந்தப் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Summary

Will arasan leave the film? Vijay Sethupathi responds!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.