நடிகை சாய் பல்லவி அதிக பிலிம்ஃபேர் விருதுகளை வென்றுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் சிறந்த நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. பான் இந்தியளவு நட்சத்திரமான இவர், தற்போது ராமாயணம், தனுஷ் - 55 ஆகிய திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மேலும், இயக்குநர் மணிரத்னம் இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
சில நாள்களுக்கு முன், பிலிம்ஃபேர் விருது நிகழ்வில் அமரன் திரைப்படத்தில் நடித்ததற்காக சாய் பல்லவிக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில், தென்னிந்திய சினிமாவிலேயே இந்த தலைமுறை நடிகைகளில் அதிக ஃபிலிம்பேர் விருதுகள் வென்றவர் என்கிற சாதனையைச் செய்துள்ளார் சாய் பல்லவி.
முதன் முதலாக பிரேமம் திரைப்படத்திற்காக பிலிம்ஃபேர் விருதை வாங்கிய சாய் பல்லவி, லவ் ஸ்டோரி, ஷ்யாம் சிங்கா ராய், விராத பர்வம், கார்கி, அமரன் என அடுத்தடுத்து சிறந்த நடிகைக்கான விருதை வென்ற அசத்தியுள்ளார்.
இதுபோக, கடந்த 10 ஆண்டுகளில் 15 திரைப்படங்களில் நடித்துள்ள சாய் பல்லவி, இதுவரை மாநில விருதுகள் உள்பட 32 விருதுகளையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராமாயணா - யஷ், சாய் பல்லவி கிளிம்ஸுக்கு காத்திருக்கும் ரசிகர்கள்!
ராமராக ரன்பீர் கபூர்... வியப்பில் ஆழ்த்தும் ராமாயணா கிளிம்ஸ்!

'ஒரு நாள்' டிரைலர்!
7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

