காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

கல்கி - 2 படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன்!

கல்கி - 2 படப்பிடிப்பு குறித்து...

அமிதாப் பச்சன், கமல் ஹாசன்

Published On :

கல்கி ஏடி 2898 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'. மகாபாரதம், ஏஐ தொழில்நுட்பம், கல்கி அவதாரம் என புராணக் கதைகளுடன் எதிர்காலத்தை கற்பனை செய்து உருவான இப்படம் தொழில்நுட்ப ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது.

மேலும், ரூ. 1000 கோடி வரை வசூலித்து வணிக ரீதியிலும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இதில், முன்னணி கதாபாத்திரங்களில் கமல் ஹாசன், பிரபாஸ் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தொடர்ந்து, கல்கி - 2 படப்பிடிப்பில் கலந்துகொள்ள தீபிகா படுகோன் பல நிபந்தனைகளை விதித்ததால் அவரைத் தயாரிப்பு நிறுவனம் படத்திலிருந்து நீக்கியது.

மேலும், தீபிகா படுகோன் நடித்துவந்த கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவியை நடிக்க வைக்க தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாகவும் இதில் நடிகர்கள் அமிதாப் பச்சனுக்கும் கமல் ஹாசனுக்கும் இடையேயான காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.