மம்முட்டி - மோகன்லால் கூட்டணியின் பேட்ரியாட்! புதிய போஸ்டர்!

பேட்ரியாட் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது குறித்து...
Mammootty and Mohanlal in the film Patriot.
பேட்ரியாட் படத்தில் மம்மூட்டி - மோகன்லால். படம்: யூடியூப் / ஆண்டனி ஜோசப் ஃபிலிம் கம்பெனி.
Updated on
1 min read

நடிகர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடிக்கும் “பேட்ரியாட்” திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

மலையாள திரையுலகின் ஜாம்பவான் நடிகர்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடிக்கும் புதிய படம் “பேட்ரியாட்”. இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்துள்ளது.

நீண்டகாலத்திற்குப் பிறகு மலையாள சினிமாவின் இரண்டு பெரும் நடிகர்களும் இணைந்து நடித்துள்ள இப்படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.

மேலும், நடிகர்கள் குஞ்சக்கோ போபன், ஃபஹத் ஃபாசில், நயன்தாரா உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், பேட்ரியாட் திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு புதன்கிழமை (பிப். 26) வெளியிட்டுள்ளனர். இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் இசையில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஏப். 23 அன்று திரையரங்குகளில் வெளியாகின்றது.

Mammootty and Mohanlal in the film Patriot.
சிறப்புக் காட்சியில் வரவேற்பைப் பெற்ற தாய் கிழவி..! பிரபலங்கள் பங்கேற்பு!
Summary

The new poster of the movie “Patriot”, starring famous actors Mammootty and Mohanlal, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com