
மம்மூட்டி - மோகன்லால் கூட்டணியின் பேட்ரியாட்! புதிய போஸ்டர்!
பேட்ரியாட் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது குறித்து...

பேட்ரியாட் படத்தில் மம்மூட்டி - மோகன்லால். - படம்: யூடியூப் / ஆண்டனி ஜோசப் ஃபிலிம் கம்பெனி.
நடிகர்கள் மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடிக்கும் “பேட்ரியாட்” திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
மலையாள திரையுலகின் ஜாம்பவான் நடிகர்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடிக்கும் புதிய படம் “பேட்ரியாட்”. இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்துள்ளது.
நீண்டகாலத்திற்குப் பிறகு மலையாள சினிமாவின் இரண்டு பெரும் நடிகர்களும் இணைந்து நடித்துள்ள இப்படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.
மேலும், நடிகர்கள் குஞ்சக்கோ போபன், ஃபஹத் ஃபாசில், நயன்தாரா உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், பேட்ரியாட் திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வியாழக்கிழமை (பிப். 26) வெளியிட்டுள்ளனர். இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் இசையில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஏப். 23 அன்று திரையரங்குகளில் வெளியாகின்றது.
Summary
The new poster of the movie “Patriot”, starring famous actors Mammootty and Mohanlal, has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






