3 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய ஆல்பம்..! பிடிஎஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி!

பிடிஎஸ் இசைக்குழுவினரின் புதிய ஆல்பம் குறித்து...
BTS music K-pop Team
பிடிஎஸ் இசைக்குழுவினர்.படம்: யூடியூப் / பேங்டன்டிவி
Updated on
1 min read

தென் கொரியாவில் இருக்கும் பிடிஎஸ் எனும் கே-பாப் இசைக்குழுவிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.

இவர்களது புதிய ஆல்பம் 2022க்குப் பிறகு இந்தாண்டு மார்ச்சில் வெளியாகுமென கொரிய செய்தித்தாள்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தென் கொரியாவில் 18-35 வயதுக்குள் ஆண்கள் கட்டாயமாக 18-21 மாதங்கள் ராணுவத்தில் பணியாற்ற வேண்டுமென்ற நிபந்தனையின் அடிப்படையில் பிடிஎஸ் குழுவினரும் தங்களது சேவையை முடித்துவிட்டு வந்தனர்.

கடைசியாக இந்தக் குழுவினர் 2022-ல் ‘ப்ரூப்’ எனும் ஆல்பத்தை வெளியிட்டிருந்தார்கள்.

தற்போது மார்ச் 20ஆம் தேதி தங்களது புதிய ஆல்பம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் மொத்தமாக 7 நபர்கள் இருக்கிறார்கள். மூன்றாண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இணைந்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Popular K-pop band BTS is all set to make a comeback on March 20 by releasing a new album, their first since "Proof" in 2022.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com