மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!யுஜிசி - நெட் தேர்வுக்கான விடைக்குறிப்பு விரைவில் வெளியீடு!கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

புத்தாண்டிலும் அப்டேட் இல்லையா? வருந்தும் சூர்யா ரசிகர்கள்!

சூர்யாவின் கருப்பு...

News image

நடிகர் சூர்யா

Updated On :1 ஜனவரி 2026, 3:27 pm IST

நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் குறித்து அப்டேட் வெளியாவதில் தொடர் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா என்கிற வரிசையே நீண்ட காலமாக இருக்கிறது. இதில், உச்ச நட்சத்திரம் என்கிற அடையாளத்துடன் விஜய் ஜன நாயகன் திரைப்படத்துடன் சினிமாவைவிட்டு விலகுகிறார்.

நடிகர் அஜித் குமார் நடிப்பதுடன் கார் பந்தயத்திலும் முழு கவனம் செலுத்தி வருவதால், சினிமாவில் நடித்தே ஆக வேண்டும் என்கிற எந்தக் காட்டாயத்திலும் அவர் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த இருவரை ஒப்பிட, நடிகர் சூர்யா தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு என இந்தாண்டு மூன்று வெளியீடுகளைக் காண உள்ளார்.

இறுதியாக, சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா, ரெட்ரோ ஆகிய திரைப்படங்கள் சரியான வணிகத்தையும் வரவேற்பையும் பெறாததால் தற்போது நடித்து முடித்துள்ள கருப்பு திரைப்படத்திற்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Story image

ஆனால், இன்னும் இப்படத்திற்கான ஓடிடி பேச்சுவார்த்தைகள் முடிவடையாததால் திரையரங்க வெளியீட்டுத் தேதி உறுதி செய்யப்படவில்லை.

அதனால், படத்தின் புதிய பாடல்களோ, மற்ற அறிவிப்புகளோ வரமால் இருக்கிறது. தற்போது, புத்தாண்டு போஸ்டர் மட்டும் வெளியாகியுள்ளது. முழுப்படமும் முடிந்தும் சூர்யாவுக்கே வெளியீடு பிரச்னை வந்திருப்பது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.