ரூ.100 கோடியை நோக்கி நிவின் பாலியின் சர்வம் மாயா!

நடிகர் நிவின் பாலியின் சர்வம் மாயா படம் குறித்து...
Nivin Pauly with Aju Varghese.
அஜு வர்கீஸுடன் நிவின் பாலி. படம்: எக்ஸ் / நிவின் பாலி.
Updated on
1 min read

மலையாள நடிகர் நிவின் பாலியின் சர்வம் மாயா திரைப்படம் ரூ.100 கோடியை நெருங்கி வருகிறது.

இயக்குநர் அகில் சத்யன் இயக்கத்தில் உருவான இந்தப் படம் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படத்தில் அஜு வர்கீஸ், ரியா ஷிபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவான இந்தப் படம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதுவரை இப்படம் ரூ.76 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ரூ.100 கோடியை எட்டுமென கணிக்கப்படுகிறது.

நீண்ட காலமாக வெற்றிப்படம் இல்லாமல் ஏமாற்றத்துடன் இருந்த நிவின் பாலிக்கு கம்பேக்-ஆக சர்வம் மாயா திரைப்படம் அமைந்துள்ளது.

நிவின் நடிப்பில் உருவாகியுள்ள டியர் ஸ்டூடன்ட்ஸ், பென்ஸ் ஆகிய திரைப்படங்கள் இந்தாண்டு வெளியாகவுள்ளன.

Summary

Malayalam actor Nivin Pauly's film 'Sarvam Maya' is nearing the ₹100 crore mark.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com