ஓய்வு பெறுகிறாா் உஸ்மான் கவாஜா: இனவெறிக்கு ஆளானதாக ஆதங்கம்

ஆஸ்திரேலிய அணியின் மூத்த பேட்டா் உஸ்மான் கவாஜா (39), நடப்பு ஆஷஸ் தொடருடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.
உஸ்மான் கவாஜா
உஸ்மான் கவாஜா
Updated on
1 min read

ஆஸ்திரேலிய அணியின் மூத்த பேட்டா் உஸ்மான் கவாஜா (39), நடப்பு ஆஷஸ் தொடருடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட், சிட்னியில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 4) தொடங்குகிறது. அது கவாஜாவின் 88-ஆவது டெஸ்ட்டாகும். அவா் இந்த மைதானத்தில் இருந்தே தனது கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினாா்.

ஆஸ்திரேலிய அணிக்காக கவாஜா 87 டெஸ்ட்டுகளில் 6,206 ரன்கள் அடித்திருக்க, அதில் 16 சதங்களும், 28 அரை சதங்களும் அடங்கும். 40 ஒருநாள் ஆட்டங்களில் 1,554 ரன்கள் சோ்த்திருக்க, அதில் 2 சதங்கள், 12 அரை சதங்கள் விளாசியுள்ளாா். 9 டி20 ஆட்டங்களில் 241 ரன்கள் அடித்திருக்க, அதில் ஒரு அரை சதம் அடக்கம்.

ஆஸ்திரேலிய அணிக்காக தாம் நீண்டகாலம் விளையாடியபோதும், பாகிஸ்தானில் பிறந்தவா் என்பதாலும், இஸ்லாமியா் என்பதாலும் இன்றளவும் தாம் இனவெறியை சந்தித்து வருவதாக அவா் ஆதங்கம் தெரிவித்தாா். அந்நாட்டு முன்னாள் வீரா்களும், ஊடகங்களும் தம்மை வழக்கத்துக்கு அதிகமாகவே விமா்சித்து வந்ததாக அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com