

டாக்ஸிக் படத்தில் பாலிவுட் நடிகை தாரா சுதாரியாவின் கதாபாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் யஷ் நடிப்பில் மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் ’டாக்ஸிக்’ திரைப்படம் உருவாகி வருகிறது.
கேஜிஎஃப் - 2 திரைப்படத்திற்கு அடுத்ததாக யஷ் நடிக்கும் படம் என்பதால் இதன் மீது ரசிகர்களுக்கு அதீத எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கேவிஎன் புரோடக்ஷன்ஸ் மற்றும் நடிகர் யஷ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருக்கிறது.
இந்தப் படம் வரும் மார்ச் 19 ஆம் தேதி திரைக்கு வருகிறது. சமீபத்தில் நடிகை நயன்தாரா கங்கனா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக போஸ்டர் வெளியானது.
இந்நிலையில், பாலிவுட் நடிகை தாரா சுதாரியா ரெபேக்கா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக போஸ்டர் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.