

பிக் பாஸ் 9 சீசனில் ஒரே நாளில் இருவருக்கு ரெட் கார்டு வழங்கபட்டு அதிரடி காட்டப்பட்டுள்ளது.
அநாகரிகமாக நடந்துகொண்ட பார்வதி, கமரூதினுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி 13 வாரங்களைக் கடந்துள்ள நிலையில், தற்போது பார்வதி, கமருதீன், சாண்ட்ரா, விக்ரம், வினோத், அரோரா, திவ்யா கணேஷ், சபரிநாதன், சுபிக்ஷா உள்ளிட்டோர் விளையாட்டில் தொடர்ந்து வருகின்றனர்.
நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர் சாண்ட்ராவை பார்வதி மற்றும் கமரூதின் இணைந்து காரில் இருந்து கீழே தள்ளிவிட்டார்கள்.
இதனால் சாண்ட்ராவுக்கு வலிப்பு வந்தது. பின்னர் அவரை சக போட்டியாளர்கள் மருத்துவக்குழுவிடம் தூக்கிச் சென்றனர்.
மேலும் ஆபாசமாகப் பேசிக்கொண்டதால் பிக் பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.
இதுவரையான தமிழ் பிக் பாஸ் வரலாற்றிலேயே இப்படி ஆனதில்லை எனப் பார்வையாளர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
சமூக வலைதளத்தில் பார்வதி, கமரூதினுக்கு எதிராக வசைகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், பார்வதி, கமரூதினுக்கு ரெட் கார்டு வழங்கப்படதாக 90ஆம் நாளுக்கான புரோமோ வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.