மம்மூட்டி - மோகன்லால் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் நடித்துள்ள படத்தின் படப்பிடிப்பு குறித்து...
Mammootty and Mohanlal in the film Patriot.
பேட்ரியாட் படத்தில் மம்மூட்டி - மோகன்லால். படம்: யூடியூப் / ஆண்டனி ஜோசப் ஃபிலிம் கம்பெனி.
Updated on
1 min read

மலையாளத்தில் முன்னனி நடிகர்களாக இருக்கும் மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடித்துள்ள பேட்ரியாட் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

ஆண்டனி ஜோசப் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சுமார் 140 நாள்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது முடிவடைந்துள்ளது.

நடிகர் மம்மூட்டியின் கடைசி படமான களம்காவல் நல்ல வரவேற்பைப் பெற்றது. மோகன்லாலின் ஹிருதயப்பூர்வம் படமும் வெற்றிப் படமானது.

கடந்த 2008 ஆம் ஆண்டு மோகன்லால் - மம்மூட்டி இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள். தற்போது, 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடித்துள்ளார்கள்.

மம்மூட்டியின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமாக உருவாகியுள்ள இதன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்தப் படத்தில் ஃபகத் ஃபாசில், நயன்தாரா, ரேவதி, குஞ்சக்கோ போபன், கிரேஸ் ஆண்டனி, இந்திரன்ஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்

இந்தாண்டு விஷு விழாவை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Summary

The shooting of the film 'Patriot', starring Mammootty and Mohanlal, who are leading actors in Malayalam cinema, has been completed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com