பிக் பாஸ் 9 ஆட்டத்தையே மாற்றியிருப்பேன்: விஜே பார்வதி, கமருதீனை விமர்சித்த எஃப்.ஜே.!

பிக் பாஸ் வீட்டில் இருந்திருந்தால் ஆட்டத்தையே மாற்றியிருப்பேன் என ரெட் கார்டு விவகாரம் குறித்து எஃப்.ஜே. கருத்து...
காரில் இருந்து வெளியே தள்ளப்பட்ட சான்ட்ரா / எஃப்ஜே
காரில் இருந்து வெளியே தள்ளப்பட்ட சான்ட்ரா / எஃப்ஜேபடம் - எக்ஸ்
Updated on
2 min read

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் நான் இருந்திருந்தால் ஆட்டத்தை மாற்றியிருப்பேன் என இசைக்கலைஞர் எஃப்.ஜே., தெரிவித்துள்ளார்.

மேலும், சான்ராவிடம் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்ட விஜே பார்வதியையும் கமருதீனையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 14 வது வாரத்தை எட்டியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் 9 போட்டியாளர்கள் மட்டுமே இருந்த நிலையில், 13வது வாரம் முழுக்க நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுபவருக்கான போட்டிகள் நடத்தப்பட்டன.

மொத்தம் 8 போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் அதிக புள்ளிகளைப் பெற்று அரோரா நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

காருக்குள் அதிக நேரம் தாக்குப்பிடிப்பதே 8 வது போட்டியாக நடத்தப்பட்ட நிலையில், அதில் அநாகரிகமாக நடந்துகொண்டதற்காக விஜே பார்வதி மற்றும் கமருதீனுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நடிகை சான்ட்ராவை போட்டி விதிகளுக்கு புறம்பாக மனிதாபிமானமற்ற முறையில் காரில் இருந்து உதைத்து வெளியேற்றியதற்காகவும், அநாகரிகமாக தனிப்பட்ட முறையில் தாக்கிப்பேசியதாலும் விஜே பார்வதியும் கமருதீனும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதனால், ஞாயிற்றுக்கிழமையான இன்று பிக் பாஸ் வீட்டில் 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். எனினும் இன்று ஒரு போட்டியாளர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ரெட் கார்டு விவகாரம் தொடர்பாக பிக் பாஸ் 9 போட்டியாளரும் பீட் பாக்ஸ் இசைக்கலைஞருமான எஃப்ஜே கருத்து தெரிவித்துள்ளார்.

விஜே பார்வதியும் கமருதீனையும் விமர்த்து அவர் பேசியதாவது:

''அடுத்தவனை கீழே தள்ளிவிட்டு மேலே செல்ல வேண்டும் என நினைப்பது கேவலமான எண்ணம். சான்ட்ராவை காரில் இருந்து உதைத்து பார்வதியும் கமருதீனும் வெளியே தள்ளுகின்றனர். போட்டி என்றால் ஆரோக்கியமான முறையில் இருக்க வேண்டும். கீழ்த்தரமானதாக இருக்கக் கூடாது.

சான்ட்ராவிடம் நடந்துகொண்டதப்போன்று விக்கல்ஸ் விக்ரமிடம் நடந்துகொள்ள முடியுமா? கமருதீனை தூக்கி எறிந்துவிடுவார். உடலளவில் வலிமைமிக்க மற்ற போட்டியாளர்களிடம் இவ்வாறு நடந்துகொள்ள முடியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வாய்ப்பு கிடைக்காமல் எத்தனையோ பேர் ஏங்கிக்கொண்டு உள்ளனர். ஆனால், உள்ளே 24 பேருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்றால், மக்களை மகிழ்விக்க அதனைப் பயன்படுத்த வேண்டும். தனிப்பட்ட முறையில் கீழ்த்தரமான புகழ் தேட நினைக்கக்கூடாது.

நான் பிக் பாஸ் வீட்டில் இருந்திருந்தால், ஆட்டத்தையே மாற்றியிருப்பேன். சான்ட்ராவை கமருதீனும் பார்வதியும் வெளியே தள்ளினார்கள். நான் அங்கு இருந்திருந்தால், என்னுடைய ஆட்டம் போனாலும் பரவாயில்லை என்று, கமருதீனையும் விஜே பார்வதியையும் காரில் இருந்து வெளியே தள்ளியிருப்பேன்.

ஆட்டத்தை ஆரோக்கியமாக ஆடாமல், சண்டையிட்டால் நானும் சண்டையிட்டு பதிலடி கொடுத்திருப்பேன். ஆனால், பிக் பாஸ் சண்டையிடுவதற்கான இடமல்லம்.

சபரி, விக்கல்ஸ் விக்ரம், கானா வினோத் என பொழுதுபோக்கிற்கு பஞ்சமில்லாத நபர்கள் இருக்கும்போது பிக் பாஸ் வீட்டில் யார் இருக்க வேண்டும்? யார் இருக்கக் கூடாது? என்பதில் மக்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும்'' என விடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

காரில் இருந்து வெளியே தள்ளப்பட்ட சான்ட்ரா / எஃப்ஜே
பிக் பாஸ் 9: ரெட் கார்டு வாங்கியதால் விஜே பார்வதி, கமருதீனுக்கு ஏற்படும் பிரச்னைகள்!
Summary

Bigg Boss 9 tamil FJ criticizes VJ Parvathy and Kamarudin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com