ஜன நாயகன் டிரைலரில் இடம்பெற்ற காட்சி ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் திரைப்படம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகிற ஜனவரி 9 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்த நிலையில், படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.
தமிழ் டிரைலர் மட்டுமே யூடியூபில் விரைவாக 2.8 கோடி (28 மில்லியன்) பார்வைகளைக் கடந்து, புதிய சாதனையைச் செய்யவுள்ளது.
இந்த நிலையில், டிரைலரின் ஆரம்பக் காட்சியில், “சம்பவம் பண்றவனைக் கேள்விப்பட்ருப்ப, அதுல ரெகார்ட் வச்சுருக்கவனைக் கேள்விப்பட்டிருக்கியா?” என்கிற வசனம் இடம் பெற்றிருந்தது.
தற்போது, இதனைப் பேசிய கதாபாத்திரம் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் என ரசிகர்கள் ஊகித்துள்ளனர். டப்பிங்கில் அவர் குரலுக்குப் பதிலாக வேறு ஒரு குரல் இடம்பெற்றிருந்தாலும் தோற்றத்தை வைத்து அது ஆனந்த் ஆகவே இருக்கும் என கூறி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.