

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் அரோரா நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தேர்வான நிலையில், சபரியும் அடுத்ததாக இறுதிப்போட்டிக்குச் சென்றுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இரு வாரங்களில் வெற்றியாளரை தீர்மானிக்க வேண்டியுள்ளதால், போட்டியாளர்கள் தீவிரமாக விளையாடி வருகின்றனர்.
தற்போது அரோரா, கானா வினோத், விக்கல்ஸ் விக்ரம், சபரி, சான்ட்ரா, திவ்யா என 6 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் எஞ்சியுள்ளனர்.
இதில், கடந்த வாரம் வைத்த போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெற்று அரோரா நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தேர்வாகியுள்ளார். எஞ்சிய 5 பேர் இந்த வாரத்துக்கான நாமினேஷன் பட்டியலில் இருந்தனர்.
இதனிடையே இதுவரை எந்தவொரு சீசனிலும் இல்லாத வகையில், புதிதாக டாஸ்க் ஒன்றை பிக் பாஸ் வைத்தார். அதாவது, 5 பேரில் நாமினேஷனில் இருந்து காப்பாற்ற நினைக்கும் இருவரின் பெயர்களை குறிப்பிட வேண்டும். இருவரை காப்பாற்றிவிட்டு இரு மிளகாய்களை சாப்பிட வேண்டும் என்பதே அந்த டாஸ்க்.
இதில் விளையாடிய கானா வினோத் சபரியை காப்பாற்றுவதாகக் கூறினார். ஏனெனில் புள்ளிப் பட்டியலில் முதன்மையான இடத்தில் இருந்தும், சான்ட்ராவுக்கு பிரச்னை என்றவுடன் எதையும் பொருட்படுத்தாது போட்டியில் இருந்து வெளியேறி சுயநலமின்றி உதவியதற்காக அவரைக் காப்பாற்றுவதாகக் கூறினார்.
அரோரா விளையாடும்போது சான்ட்ராவையும், சபரியையும் காப்பாற்றுவதாகக் கூறினார்.
சான்ட்ராவுக்கு கடந்த வாரம் நடந்த அநியாயத்திற்கு இந்த வாரம் அவர் வெளியேறாமல் இருந்து இறுதிப்போட்டிக்குச் செல்ல வேண்டும் என்றும், புள்ளிகளை சபரி அதிகம் பெற்றிருந்தும் சான்ட்ராவுக்காக போட்டியில் இருந்து வெளியேறி உதவியதற்காக காப்பாற்றுவதாகவும் கூறினார்.
சபரி விளையாடும்போது சான்ட்ரவையும் கானா வினோத்தையும் காப்பாற்றுவதாகக் கூறினார். இவ்வாறு போட்டியாளர்கள் பலரும் சபரியைக் காப்பாற்றியுள்ளனர். இதனால், அரோராவைத் தொடர்ந்து இறுதிப்போட்டிக்கு சபரி தேர்வாகியுள்ளார். சபரி தவிர எஞ்சிய அனைவரும் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தேர்வாவதற்காக டிக்கெட் டூ ஃபினாலே போட்டிகள் வைக்கப்பட்டதாகவும் ஆனால், அதில் வெற்றி பெற்றிருந்தாலும் தற்போது நாமினேஷன் பட்டியலில் அரோரா இடம்பெற்றுள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
யாரைக் காப்பாற்றுவதற்காக இத்தகைய போட்டி நடத்தப்படுகிறது என்று சிலர் கருத்திட்டு வந்தாலும், தகுதியான நபரான சபரி இதன்மூலம் இறுதிப்போட்டிக்குச் சென்றுள்ளதால் பிக் பாஸ் ரசிகர்கள் இதனை வரவேற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.