

பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் வெளியான 320 முன்னோட்ட விடியோக்களில்(Promo), 220 முன்னோட்ட விடியோக்களில் விஜே பார்வதியின் முகம் காண்பிக்கப்பட்டு இருப்பதாக அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியின் 13வது வார இறுதிநாள் நிகழ்ச்சியில் விஜே பார்வதி மற்றும் கமரூதினுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டு, வெளியே அனுப்பப்பட்டனர்.
நேரடியாக இறுதி வாரத்துக்கு செல்வதற்கான (Ticket To Final) போட்டியில், சக போட்டியாளர் சான்ட்ராவை பார்வதி மற்றும் கமரூதின் இணைந்து காரில் இருந்து கீழே தள்ளிவிட்டது, மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மேலும் வரம்பைமீறி பேசிக்கொண்டதால் பிக் பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் சான்ட்ராவை தள்ளிவிட்ட பார்வதி மற்றும் கமரூதினுக்கு ரெட் கார்டு வழங்க வேண்டும் என்று சமூக ஊடங்களில் ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, பார்வதி மற்றும் கமரூதின் ஆகிய இருவருக்கு தொகுப்பாளர் விஜய் சேதுபதி ரெட் கார்டு வழங்கி, போட்டியைவிட்டு வெளியே அனுப்பினார்.
இதனிடையே, விஜே பார்வதிக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டதற்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், விஜே பார்வதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், ”பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் வெளியான 320 முன்னோட்ட விடியோக்களில்(Promo), 220 முன்னோட்ட விடியோக்களில் நான் இருந்துள்ளேன், என்னுடைய முகம் காண்பிக்கப்படாத முன்னோட்ட விடியோக்களே இல்லை.
பிக் பாஸ் 9 நிகழ்ச்சி முழுவதும் நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ நான் ஆதிக்கம் செலுத்தியுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.