பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வியானாவுடன் வெளியேறுகிறேன் : விக்கல்ஸ் விக்ரம்

வியானா உடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக விக்கல்ஸ் விக்ரம் தெரிவித்துள்ளது குறித்து...
விக்கல்ஸ் விக்ரம் / வியானா
விக்கல்ஸ் விக்ரம் / வியானாபடம் - எக்ஸ்
Updated on
2 min read

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மகிழ்ச்சியாக வெளியேறுவதாக விக்கல்ஸ் விக்ரம் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இனியும் ஒருவரை குறைக்கூறி என்னால் போட்டியைத் தொடர முடியாது என்றும், வியானாவுடன் வெளியேறுவது மகிழ்ச்சிதான் எனவும் விக்ரம் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 13 வது வாரத்தை எட்டியுள்ளது. குறைந்த வாக்குகளைப் பெற்றதாக கடந்த வாரத்துடன் சுபிக்‌ஷா வெளியேற்றப்பட்டார்.

அதற்கு முன்பு, விஜே பார்வதியும் நடிகர் கமருதீனும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். நடிகை சாண்ட்ராவிடம் தகாத முறையில் பேசி, வன்முறையில் ஈடுபட்டு காரில் இருந்து தள்ளிவிட்டதால், இருவருக்கும் விஜய் சேதுபதி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார்.

இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில், 5 பேர் மட்டுமே இறுதிப்போட்டியாளர்களாக எஞ்சியுள்ளதால், அவர்களில் ஒருவரை தன்னுடன் வெளியே அழைத்துச்செல்வதற்கு வியானா மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

வியானாவை வரவேற்கும் போட்டியாளர்கள்
வியானாவை வரவேற்கும் போட்டியாளர்கள்படம் - எக்ஸ்

வியானா மீண்டும் வீட்டிற்குள் நுழைந்ததும், பிக் பாஸ் தனக்கு ஒரு டாஸ்க் கொடுத்துள்ளதாகவும், ஒருநாள் முடிவில் ஒருவரை தன்னுடன் வெளியே அழைத்துச்செல்ல உத்தரவிட்டுள்ளதாகவும் வியானா கூறுகிறார்.

இதனை அடுத்து அந்த நபர் எதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார் என்பது போன்ற விதிமுறைகளை வியானா கூறுகிறார். அப்போது பிக் பாஸ் வீட்டில் நடந்த பல ரகசியமான சம்பவங்களை போட்டியாளர்கள் முன்பு வியானா பேசுகிறார்.

இதனை பொருத்துக்கொள்ள முடியாத சான்ட்ரா வியானாவை தடுத்து நிறுத்துகிறார். எனினும் வியானா தனது கருத்துகளை எதிர்ப்புகளைத் தாண்டி முன்வைக்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் தற்போதுதான் சண்ட சச்சரவுகள் இன்றி அமைதியாக சென்றுக்கொண்டிருக்கும் நிலையில், வியானா மீண்டும் சச்சரவுகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளார்.

போட்டியாளர்களிடம் பேசும் வியானா
போட்டியாளர்களிடம் பேசும் வியானாபடம் - எக்ஸ்

இதனால் மனமுடைந்த விக்ரம் மீண்டும் என்னால் வீட்டில் உள்ள மற்றவர்களை குறை கூறி போட்டியைத் தொடர முடியாது எனக் கூறுகிறார்.

மேலும் விக்ரம் பேசியதாவது, ''என்னால் இதற்கு மேல் உங்களது குறைகளைக் கூறி போட்டியை ஆட முடியாது. என்னை மன்னித்துவிடுங்கள் பிக் பாஸ். திவ்யாவை நான் தெரிந்தே அழ வைத்தேன். அதனால் நான் தானாக முன்வந்து இதனை செய்கிறேன். வியானா உடன் நான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே செல்வது மகிழ்ச்சிதான்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

விக்கல்ஸ் விக்ரம் / வியானா
விஜே பார்வதியை பயன்படுத்திக்கொண்டது பிக் பாஸ்: வியானா
Summary

I am happily leaving the Bigg Boss 9 tamil show Vikkals Vikram

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com