

நடிகர் லொள்ளு சபா வெங்கட் ராஜ் உடல்நலக்குறைவால் காலமானார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் வெங்கட் ராஜ் (68). அந்நிகழ்ச்சியில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து பல காட்சிகளில் நடித்து ரசிகர்களிடம் கவனம் பெற்றார்.
தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் நடித்த மனிதன், நடிகர் சந்தானத்தின் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், டிக்கிலோனா உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.
இந்த நிலையில், நுரையீரல் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெங்கட் ராஜ் நேற்று (ஜன. 4) மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.