இந்தியாவில் துரந்தர் திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளதாகப் படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.
இதுவரை வெளியான ஹிந்தி திரைப்படங்களிலேயே இந்தியாவில் அதிகம் வசூலிட்டிய படமாக துரந்தர் சாதனை படைத்திருக்கிறது.
ஆதித்யா தார் இயக்கத்தில் கடந்த டிசம்பரில் வெளியான துரந்தர் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிகளைத் தாண்டி வசூலித்துள்ளது.
இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ரன்வீர் சிங் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்தப் படம் பிரிவினையைத் தூண்டுவதாகவும் தேசப்பற்று வளர்ப்பதாகவும் சமூக வலைதளத்தில் இரு பிரிவாக ஆதரவும் எதிர்ப்பும் பெருகின.
இந்நிலையில், இந்தப் படம் இந்தியாவில் மட்டும் இதுவரை 33 நாள்களில் ரூ.831 கோடி வசூலித்துள்ளது. இதுதான் இந்தியாவில் அதிகம் வசூலித்த முதல் ஹிந்தி படமாக வரலாறு படைத்துள்ளது.
இதற்கு முன்பாக தெலுங்குத் திரைப்படமான புஷ்பா 2 ஹிந்தி டப்பிங்கில் ரூ.830 கோடி வசூலித்து முதலிடத்தில் இருந்தது.
தற்போது, புஷ்பா சாதனையை முறியடித்து துரந்தர் முதலிடம் பிடித்துள்ளது.
இந்தியாவில் அதிகம் வசூலித்த ஹிந்தி திரைப்படங்கள்
1. துரந்தர் - ரூ.831.40 கோடி
2. புஷ்பா - ரூ.830 கோடி
3. ஜவான் - ரூ.643 கோடி
4. ஸ்ட்ரீ 2 - ரூ. 627 கோடி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.