

ஆஸ்கர் மியூசியத்தில் மம்மூட்டியின் பிரம்மயுகம் திரைப்படம் திரையிடப்படுவதை முன்னிட்டு இயக்குநரின் இன்ஸ்டா பதிவு கவனத்தை ஈர்த்து வருகிறது.
ராகுல் சதாசிவன் இயக்கிய பிரம்மயுகம் திரைப்படம் கடந்த 2024ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
நடிகர் மம்மூட்டி இந்தப் படத்தில் பூதமாக நடித்திருப்பார். மலையாளத்தின் பழங்குடியின கதைகளை மையமாக வைத்து சாதிய மேட்டிமைத்தனங்களைக் கேள்விக்குள்ளாக்கும் படமாக இந்தப் படம் நல்ல விமர்சனங்களையும் பெற்றது.
இந்தப் படத்திற்காக மம்மூட்டிக்கு சிறந்த நடிகருக்கான கேரள அரசின் விருதும் கிடைத்தது.
இவருடன் சேர்த்து படக்குழுவுக்கும் மொத்தமாக 4 விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் ஆஸ்கர் மியூசியத்தின் மதிப்புமிக்க திரையரங்கில் இந்தத் திரைப்படம் பிப்.2026-இல் திரையிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இயக்குநர் வெளியிட்ட இன்ஸ்டா பதிவில் கூறியதாவது:
நான் வளரும் போது கேட்ட கதைகளில் இருந்துதான் பிரம்மயுகம் படம் உருவானது. அந்தக் கதைகளில் கேட்ட பயம் இன்னும் அப்படியே இருக்கிறது. அதன் அமைதி எப்போதும் என்னை விட்டு அகலாது.
நிலம், மொழிகளைக் கடந்து அது பிரதிபலிக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்தப் படத்துக்கு உயிர்கொடுத்த நடிகர், நடிகைகள் உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.
ஆஸ்கர் மியூசியத்தில் ‘வேர் த ஃபாரஸ்ட் மீட் த சீ’ எனும் தொடரில் திரையிடப்படும் ஒரே இந்தியப் படமாக பிரம்மயுகம் இருக்கிறது. லாஞ் ஏஞ்சலீஸில் வரும் பிப்.12ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.