

பாலிவுட் தம்பதியினர் விக்கி கௌஷல் மற்றும் கத்ரீனா கைஃப் தங்களது மகனுக்கு விஹான் எனப் பெயரிட்டுள்ளனர்.
முதல்முறையாக அவர்களது மகனின் கையை தங்களது கைக்குள் இருக்குமாறு பதிவிட்டு இந்த நற்செய்தியை அறிவித்துள்ளார்கள்.
பாலிவுட் தம்பதி கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக கடந்த நவ.7ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
ராஜஸ்தானில் உள்ள நட்சத்திர விடுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு நட்சத்திர ஜோடிகளான கத்ரீனா கைஃப் - விக்கி கெளஷல் ஆகியோர் மிக பிரம்மாண்டமாகத் திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில், தங்கள் மகனுக்கு விஹான் எனப் பெயரிட்டுள்ளார்கள். கத்ரீனாவின் தனது இன்ஸ்டா பதிவில் கூறியதாவது:
எங்கள் வாழ்க்கையின் ஒளி
விஹான் கௌஷல்
பிராத்தனைக்கான பதில் கிடைத்தது. வாழ்க்கை அழகானது. திடீரென வாழ்க்கை மாறிவிட்டது. வார்த்தைகளுக்கு அப்பால் நன்றியுணர்வுடன் இருக்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.