

பராசக்தி திரைப்படத்தில் மலையாள நடிகர் பாசில் ஜோசப் நடித்ததுள்ளதை நடிகர் சிவகார்த்திகேயன் உறுதி செய்தார்.
பொங்கலை முன்னிட்டு பராசக்தி திரைப்படம் வரும் ஜன.10ஆம் தேதி உலகெங்கும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தினை டாவ்ன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, குரு சோமசுந்தரம், ராணா டகுபதி நடித்துள்ளார்கள்.
மலையாள இயக்குநரும் நடிகருமான பாசில் ஜோசப் இந்தப் படத்தில் நடித்துள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், கொச்சிக்கு புரமோஷனுக்காகச் சென்ற சிவகார்த்திகேயன் அதை உறுதிப்படுத்தியுள்ளார். கொச்சியில் சிவகார்த்திகேயன் கூறியதாவது:
எல்லாருக்கும் பிடித்த எனக்கு மிகவும் பிடித்த பாசில் ஜோசப் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த ரகசியத்தைக் கூற ஏற்கெனவே இயக்குநரிடம் அனுமதி வாங்கிவிட்டேன்.
பாசில் ஜோசப்புடன்தான் நான் அதிகம் பேசியிருக்கிறேன். இலங்கையில் அவரது படப்பிடிப்பு முடிந்தும் சில நாள்கள் தங்கியிருந்தார். அவருடன் மகிழ்ச்சியாகச் சென்றது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.