உங்கள் படம் வெளியாகும் நாள்தான் பொங்கல் அண்ணா: ரவி மோகன்

விஜய் குறித்து ரவி மோகன்...
ravi mohan and vijay
ரவி மோகன், விஜய்
Updated on
1 min read

நடிகர் ரவி மோகன் ஜன நாயகன் திரைப்படம் வெளியாகாததைக் குறித்து பதிவிட்டுள்ளார்.

விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம் பொங்கல் வெளியீடாக ஜன. 9 ஆம் திரைக்கு வர இருந்தது. ஆனால், இறுதி நேரத்தில் தணிக்கை சான்றிதழ் கிடைகாததால் படத்தின் வெளியீட்டுத் தேதியை ஒத்திவைப்பதாகத் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

இதனால், விஜய்யின் கடைசித் திரைப்படமான ஜன நாயகன் பண்டிகை வெளியீட்டிலிருந்து விலகியது அவரின் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், நடிகர் ரவி மோகன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இதயம் நொறுங்கியது. விஜய்யண்ணா... உங்களின் லட்சக்கணக்கான சகோதரர்களில் ஒருவனாக நானும் துணை நிற்கிறேன். உங்களுக்கு எந்த தேதியும் தேவையில்லை. நீங்கள்தான் தொடக்கம். தேதி எதுவாக இருந்தாலும், படம் வெளியாகும் நாள்தான் பொங்கல்” எனத் தெரிவித்துள்ளார்.

தணிக்கை வாரியம் தொடர்பாக திரைத்துறையிலிருக்கும் பல பிரபலங்கள் மௌனம் காத்துவரும் சூழலில் ரவி மோகனின் இப்பதிவு விஜய் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ravi mohan and vijay
இதைச் செய்து சினிமாவை காப்பாற்ற வேண்டும்: கார்த்திக் சுப்புராஜ்
Summary

actor ravi mohan post about vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com