

டாக்ஸிக் பட இயக்குநர் கீது மோகன்தாஸ் குறித்து இயக்குநர் ராம் கோபால் வர்மா புகழ்ந்து பேசியுள்ளார்.
டாக்ஸிக் நாயகன் யஷ் அறிமுக டீசரைப் பார்த்து, “என்னால் இப்போதும் நம்பமுடியவில்லை” எனக் குறிப்பிட்டு ஆர்ஜிவி நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர் யஷ், நடிகைகள் ஹூமா குரேஷி, ருக்மணி வசந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் டாக்ஸிக் திரைப்படம் உருவாகியுள்ளது.
நடிகர் யஷ் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ’ராயா’ எனும் கதாபாத்திர அறிமுக டீசர் வெளியானது.
இந்த டீசரில், யஷ் ஒரு பெண்ணுடன் காருக்குள் நெருக்கமான உறவில் இருப்பதும் பின், வெளியே வந்து எதிரிகளைக் கொடூரமாகத் தாக்குவதுமாக காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தக் காட்சிகளுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் பெருகி வருகின்றன.
இது குறித்து ராம் கோபால் வர்மா கூறியதாவது:
டாக்ஸிக் டிரைலரைப் பார்த்தேன். கீது மோகன்தாஸ் பெண்கள் முன்னேற்றத்திற்கான குறியீடு. இந்தப் பெண்ணுடன் ஒப்பிட, எந்த ஒரு ஆண் இயக்குநர்களுக்கும் தகுதி இல்லை. இந்தக் காட்சியை அவர் எப்படி எடுத்தார் என எனக்கு இப்போதும் நம்பமுடியவில்லை எனக் கூறியுள்ளார்.
முன்னதாக கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள லையர்ஸ் டைஸ் இரண்டு தேசிய விருதுகளை வென்றது.
இவரது இரண்டாவது திரைப்படமன மூத்தோன் கேரள விருது வென்றதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.