

பத்ம பூஷண் விருது வென்ற நடிகை ஷர்மிளா தாக்குர் (வயது 81) லெஜண்டரி இயக்குநர் சத்யஜித் ராய் உடனான தனது முதல் பட நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.
ஏஎன்ஐ-க்கு அளித்த இந்தப் பேட்டியில் 14 வயதில் தன்னை எவ்வாறு சத்யஜித் ராய் சினிமாவில் நடிக்கை வைத்தார் என்பது குறித்து பேசியுள்ளார்.
அபு டிரையாலஜி எனப்படும் படங்களில் கடைசி படமான அபுர் சஞ்சார் 1959ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில்தான் நடிகை ஷர்மிளா தாக்குர் அறிமுகமானார்.
இந்தியாவில் முதல்முறையாக ஆஸ்கர் விருது வென்ற சத்யஜித் ராய் பதேர் பாஞ்சாலி திரைப்படம் மூலம் உலக அளவில் கவனம் ஈர்த்தார்.
முதல்நாள் படப்பிடிப்பை மறக்க முடியாது...
இவரது இயக்கத்தில் ஐந்து திரைப்படங்களில் நாயகியாக நடித்த நடிகை ஷர்மிளா தாக்குர் ஏஎன்ஐ-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அடக் கடவுளே, என்னுடைய முதல் காட்சி பல ஆண்டுகளுக்கு முன்பாக எடுத்தது. ஆனால், அது மிகவும் அற்புதமானது. எனக்கு இப்போதும் ஞாபகமிருக்கிறது. என்னுடைய முதல் காட்சி - வீட்டிற்குச் சென்று திரும்பிப் பார்ப்பதாகும்.
நிச்சயமாக, யாராக இருந்தாலும் தங்களுடைய முதல்நாள் படப்பிடிப்பை மறக்க மாட்டார்கள்.
எல்லாவற்றையும் எளிமையாக்கிய சத்யஜித் ராய்
தெரிந்துகொள்ள எனக்கு எல்லாமே புதியதாக இருந்ததால், அந்த நாள்கள் மிகவும் அழகாகவும் அழுத்தம் இல்லாமலும் இருந்தன. அதுதான் மானிக் தா (சத்யஜித் ராயின் புனைபெயர்)வின் அழகு. முதல் நாளில் எனக்கு எல்லாமே புதியதாக இருந்தது. அவர் எனக்கு எல்லாவற்றையும் எளிமையாக்கினார்.
ராஞ்சியில் இறங்கி நாங்கள் ஜார்க்கண்ட் வரை வாகனத்தில் செல்ல வேண்டும். அந்த இடம் அழகானதாக இருந்தது. அந்த இடத்தை அவர் அப்போதைக்கு பிரத்யேகமாகத் தேர்வு செய்திருந்தார்.
அப்பொது மிகவும் வெயிலாக இருந்தது. மரங்களில் இலைகள் கூட இல்லை; அவருக்கு அந்த மாதிரியான இடம்தான் தேவைப்பட்டது. அங்கு மின்சாரமே இல்லை; இருப்பினும் எனக்கு ஜெனரேட்டர் வைத்து கூலர் வசதியை ஏற்படுத்தினார்.
ஆண்கள் மிகவும் அசௌகரியமாக இருக்க, நாங்கள் சிரித்துக்கொண்டு இருந்தோம். ஆனால், மாலையில் நன்றாக இருக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.