

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் ஓ சுகுமாரி படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
பிறந்த நாளன்று வெளியாகியுள்ள இந்தப் போஸ்டரில் இந்தப் படம் பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ளதைப் படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை, ரம்மி, கனா, வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்தார்.
அவரது ‘டிரைவர் ஜமுனா’, ஃபர்ஹானா, புலிமடா, தீராக் காதல் ஆகிய திரைப்படங்கள் அவருக்கென தனியான ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்தன.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தெலுங்கில் இவர் நடித்துள்ள ஓ சுகுமாரி எனும் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
ஓ சுகுமாரி எனும் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய 6 மொழி போஸ்டர்களிலும் வெளியாகியுள்ளது.
பரத் தர்ஷன் இயக்கியுள்ள இந்தப் படத்தை கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்துள்ளது.
கடைசியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான தீயவர் குலை நடுங்க திரைப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளிலும் இவர் அசத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.