

பிரபல நடிகர் வித்யூத் ஜம்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிர்வாண விடியோவைப் பகிர்ந்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் இராணுவ வீரருக்கு மகனாக பிறந்தவர் வித்யூத் ஜம்வால், தனது தந்தையின் வேலை காரணமாக நாடு முழுவதும் வாழும் சூழல் ஏற்பட்டதால், கேரளாவின் களரிப்பயிற்று தற்காப்பு கலையை கற்றுத் தேர்ந்தார்.
தமிழில் பில்லா 2, துப்பாக்கி, அஞ்சான் ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்றார். கடைசியாக சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தில் நடித்திருந்தார்.
தற்காப்புக் கலையில் ஆர்வமுள்ள இவர் நிர்வாணமாக மரம் ஏறும் விடியோவை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியதாவது:
களரிப்பயிற்சி செய்பவன் என்ற முறையில், நான் ஆண்டுக்கு ஒருமுறை சஹஜம் (சுய உணர்தல்) என்ற யோகப் பயிற்சியில் ஈடுபடுகிறேன். சஹஜம் என்பது இயற்கையான எளிமை மற்றும் உள்ளுணர்வு நிலைக்குத் திரும்புவதாகும். இது இயற்கையுடனும் உள் உணர்வுடனும் ஆழமான தொடர்பை வளர்க்கின்றன.
அறிவியல் ரீதியாக, இது பல நரம்பு ஏற்பிகளையும், உடல்நிலை உணர் கருவிகளையும் தூண்டி, புலன் உணர்வுத் தகவல்களை மேம்படுத்ததி சமநிலை, ஒருங்கிணைப்பைச் செம்மைப்படுத்துகிறது.
இது மேம்பட்ட உடல் விழிப்புணர்வு, கவனக் குவிப்பை அதிகரிக்கிறது. மேலும், ஆழமான மன அமைதிக்கும் வழிவகுக்கிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.