

பிக் பாஸ் - 9 நிகழ்ச்சியில் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட கமருதீன், முதல்முறையாக பொதுவெளியில் நடனம் ஆடியுள்ளார். இந்த விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
நேரடியாக இறுதி வாரத்துக்கு செல்வதற்கான (Ticket To Final) போட்டியில், சக போட்டியாளர் சான்ட்ராவை பார்வதி மற்றும் கமருதீன் இணைந்து காரில் இருந்து கீழே தள்ளிவிட்டது, மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மேலும் வரம்பைமீறி பேசிக்கொண்டதால் பிக் பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் சான்ட்ராவை தள்ளிவிட்ட பார்வதி மற்றும் கமருதீனுக்கு ரெட் கார்டு வழங்க வேண்டும் என்று சமூக ஊடங்களில் ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, 13வது வார இறுதிநாள் நிகழ்ச்சியில் பார்வதி மற்றும் கமருதீன் ஆகிய இருவருக்கு தொகுப்பாளர் விஜய் சேதுபதி ரெட் கார்டு வழங்கி, போட்டியைவிட்டு வெளியே அனுப்பினார்.
போட்டியிலிருந்து வெளியேறிய கமருதீன், பொதுவெளியில் வராமல் இருந்த நிலையில், நேற்று(ஜன. 11) அவரது ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ஆவடியில், கமருதீனுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுடன், ரசிகர்கள் அவருக்கு கேக் வெட்டி வாழ்த்துகளை தெரிவித்து ஊக்கப்படுத்தினர்.
இளைய தலைமுறையினர் மட்டுமின்றி, பெண்கள், சிறுவர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கமருதீன் நடனம் ஆடிய விடியோ, சமூக ஊடகங்களில் வைரலானதோடு, அவரது ரசிகர்கள் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் போட்டியில் இருந்து சான்ட்ரா வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.