மாதவிடாய் காலத்தில்கூட... தனுஷ் படக்குழு மீது குற்றம்சாட்டிய பார்வதி!

பார்வதி பகிர்ந்த அனுபவம்....
தனுஷ், பார்வதி திருவோத்து
தனுஷ், பார்வதி திருவோத்து
Updated on
1 min read

நடிகை பார்வதி மரியான் படப்பிடிப்பின்போது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

பார்வதி திருவோத்து மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தென்னிந்திய மொழிகளில் நடித்து தனக்கென தனி அடையாளத்தையே உருவாக்கிக்கொண்டவர்.

கதையம்சமுள்ள படங்களில் நடிப்பதுடன் அரசியல், இலக்கியம் ரீதியிலான உரையாடல்களில் பங்கேற்று தன் கருத்துகளை அழுத்தமாக முன்வைப்பவரும்கூட.

இவர் மலையாள சினிமாவில் பெண்களுக்கு நிகழ்த்தப்படும் பாலியல் ரீதியான தாக்குதல்களுக்கு தொடர்ந்து குரல் எழுப்பியும் வருகிறார்.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய பார்வதி, “மரியான் திரைப்பட படப்பிடிப்பின்போது முழுவதுமாக தண்ணீரில் நனைவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது, உடை மாற்ற வேறு ஆடைகளையும் எடுத்து வரவில்லை. நான் ஹோட்டல் அறைக்குச் செல்ல வேண்டும் எனக் கூறினேன். ஆனால், யாரும் அதைப் பொருட்படுத்தவில்லை.

பின், எனக்கு மாதவிடாய் நான் போக வேண்டும் எனக் கத்திச் சொன்னேன். படப்பிடிப்பில் என்னுடன் சேர்த்து 3 பெண்கள் மட்டுமே இருந்தனர். அந்தச் சூழலில் யாரும் ஆதரவாக இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

தனுஷ், பார்வதி திருவோத்து
ரூ. 50 கோடிக்கு விற்பனையான டிமான்டி காலனி - 3 உரிமங்கள்!
Summary

actor parvathy about maryan movie experiences

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com