ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம் சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்
/

மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநரின் புதிய பட ரிலீஸ் தேதி!

மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநரின் புதிய படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து...

News image

’பாலன் தி பாய்’ படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / கேவிஎன் புரடக்‌ஷன்ஸ்.

Updated On :10 மே 2026, 5:23 pm IST

மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநரின் புதிய படமான ’பாலன் தி பாய்’ வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வரும் ஜூன் 19ஆம் தேதி வெளியாகிறது.

‘ஜான் ஈ மன்’ (jan.e.man) திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிதம்பரம். அப்படம், வெற்றிப் படமானதுடன் கதை ரீதியாகவும் கவனிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சிதம்பரம் இயக்கத்தில் வெளியான ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ திரைப்படம் தென்னிந்தியளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

தமிழிலேயே இப்படம், ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகக் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக உலகளவில் ரூ. 225 கோடி வசூலித்து சாதனை செய்தது.

இந்த நிலையில், ’பாலன் தி பாய்’ என்கிற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இதன் கதையை ஆவேஷம் இயக்குநர் ஜித்து மாதவன் எழுதியுள்ளார்.

கேவிஎன் புரடக்‌ஷன்ஸ் இந்தப் படம் வரும் ஜூன் 19ஆம் தேதி வெளியாகிறது என அறிவித்துள்ளது. இப்படம் வருகிற மே 14 ஆம் தேதி கேன்ஸ் சர்வதேச திரைவிழாவில் திரையிடப்படவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.