நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் வெற்றிப்படமாக அமையுமா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
நடிகர் சூர்யா நடித்து முடித்த கருப்பு திரைப்படம் நாளை (மே. 14) திரைக்கு வருகிறது. இப்படத்திற்காக சூர்யா ரசிகர்கள் காத்திருப்பதால் வணிக ரீதியாக முதல் நாள் வசூல் அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கங்குவா, ரெட்ரோ ஆகிய திரைப்படங்களின் தொடர் தோல்வியால் சூர்யாவுக்கு கருப்பு திரைப்படமாவது வெற்றியைக் கொடுக்குமா என அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் முதல் காட்சி காலை 9 மணிக்கே துவங்கவுள்ளதால், அதற்கான டிக்கெட் முன்பதிவுகளும் விறுவிறுப்பாகவே நடைபெற்று வருகின்றன.
முன்பதிவு வாயிலாகவே இதுவரை ரூ. 2 கோடிக்கும் அதிகமாக வணிகம் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், வெளியீட்டில் வேறு பெரிய படங்கள் எதுவும் இல்லை என்பதால், கருப்பு வரவேற்பைப் பெற்றால் வணிக ரீதியாகவும் வசூலைக் குவிக்கலாம் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
சினிமாவிலிருந்து முதல்வர் விஜய் விலகியபின், நடிகர் அஜித்குமாருக்கு பெரிய வணிகம் நிகழலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது, சூர்யா இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவாரா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.
Fans are waiting to see if the karupu film starring actor Suriya will turn out to be a success.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருப்பு டிரைலர்!

கருப்புசாமி, கரசாமி யாருக்கு வெற்றி?
நம்பிக்கை இருந்தால் அதிசயம் நடக்கும்: சூர்யா

இனியாவது ஜன நாயகன் வெளியாகுமா?
விடியோக்கள்

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரம்! முகத்தை மூடி வந்தது யார்?” பேரவையில் பிரேமலதாவின் கேள்விகள்! | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

புஷ்பா பட பாணியில் வந்து இறங்கிய SOFA..! | உதயநிதி கடும் விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

