பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்! கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு! விளம்பர வெறியால் டெல்டாவில் கருகும் பயிர்கள்: உதயநிதி குற்றச்சாட்டு!என்னை அதிமுக தொண்டர்களில் ஒருவர் என்று சொன்ன இபிஎஸ்ஸுக்கு நன்றி: எஸ்.பி. வேலுமணிரயிலில் பெண் சடலம் மீட்பு: 7 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க டிஜிபிக்கு மகளிர் ஆணையம் உத்தரவு

தெறிக்குது சியா என்ட்ரி... மம்மூட்டியைக் கொண்டாடும் ரசிகர்கள்!

நடிகர் மம்மூட்டியின் நடனம் கவனம் பெற்றுள்ளது...

நடிகர் மம்மூட்டி

Updated On :

ஓ.ம் திரைப்படத்தில் நடிகர் மம்மூட்டிக்கு அசத்தலான வரவேற்பு கிடைத்து வருகிறது.

நடிகர்கள் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான ஓ.ம் திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றாலும் வணிக ரீதியாக அடுத்தடுத்த நாள்களில் முன்னேற்றம் கண்டு வருகிறது.

செம்மரக் கடத்தல் கும்பலைத் தடுக்கும் கதையாக உருவான இதில் நடிகர் மம்மூட்டி ரெட் ஹில்ஸ் கார்த்திகேயன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நீண்ட காலம் கழித்து மம்மூட்டி நடித்த தமிழ்ப்படம் என்பதைத் தாண்டி ஓ.மில் அறிமுகப் பாடலான அலேக்கா லோவா பாடலில் நடிகர் மம்மூட்டி நடந்து வருவதும் சில நடன அசைவுகளைக் கொடுப்பதும் மலையாள ரசிகர்களிடம் அட்டகாசமான வரவேற்பைப் பெற்றுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே மம்மூட்டி கதையம்சமுள்ள திரைப்படங்களை மட்டும் நடித்து, கமர்சியல் அம்சங்களுக்குப் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தார். இப்படியான சூழலில் ஜென் ஸி ரசிகர்களுக்கான திரையரங்க அனுபவமாக மம்மூட்டி நடனமாடியது ரீல்ஸ்களாக வைரலாகி வருகின்றன. இதனைத் திரையரங்கில் கண்ட ரசிகர்கள் உற்சாகமாக மம்மூட்டி நடனமாடுவது போல் ஆடி வருகின்றனர்.

தற்போது, நடிகர் மம்மூட்டியின் தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பெனி நிறுவனம் இந்தக் கொண்டாட்டங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, ’சியா மீதான உங்களின் அன்பிற்கு மிக்க நன்றி’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

Actor Mammootty is getting amazing reception in Om movie.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.