
ரஷ்மிகா மனைவியாகக் கிடைத்தது பாக்கியம்: விஜய் தேவரகொண்டா
ரஷ்மிகா குறித்து பேசிய விஜய் தேவரகொண்டா...

நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா
நடிகர் விஜய் தேவரகொண்டா தன் மனைவி ரஷ்மிகா குறித்து பேசியுள்ளார்.
நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையைக் கொடுத்து தெலுங்கில் முன்னணி நடிகராக அவரை மாற்றியது. தொடர்ந்து, கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற வணிக ரீதியாகவும் அதிக சம்பளம் பெறும் நடிகரானார். தற்போது, பெரிய பட்ஜெட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
நீண்ட நாள்களாக காதலித்து வந்த நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை ரஷ்மிகா மந்தனாவும் கடந்த பிப். 26 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். தற்போது, இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ரணபலி திரைப்படம் அக். 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா, ”நான் மகிழ்ச்சிகரமான திருமண வாழ்க்கையில் இருக்கிறேன். ரஷ்மிகா எனக்கு மனைவியாகக் கிடைத்தது பெரிய பாக்கியம். உறவைக் கையாள்வதில் நான் முதிர்ச்சியான ஆள். ஆனால், ரஷ்மிகா தினமும் என்னிடம் 10 - 15 முறை ஐ லவ் யூ சொல்லச் சொல்லி நினைவூட்டிக்கொண்டே இருப்பார். அது சின்ன விஷயமாக இருந்தாலும் அந்த ஈடுபாடு உறவில் இருந்துகொண்டே இருக்க வேண்டும். ஆரோக்கியமான உறவுக்கு இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்கள்கூட பெரிதாக உதவும்.” எனக் கூறியுள்ளார்.
Actor Vijay Deverakonda has spoken about his wife, Rashmika.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







