ஆக்ரோஷமான இளைஞரே... அமிதாப் பச்சனை வாழ்த்திய கமல் ஹாசன்!
அமிதாப் பச்சனுக்கு வாழ்த்து தெரிவித்த கமல் ஹாசன்...

நடிகர்கள் அமிதாப் பச்சன், கமல் ஹாசன்
நடிகர் அமிதாப் பச்சன் பிறந்த நாளுக்கு நடிகர் கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒருகாலத்தில் பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் நடிகர் அமிதாப் பச்சன். இந்தியா முழுவதும் ஹிந்திப் படமென்றாலே அமிதாப் பச்சன்தான் என்கிற பிம்பத்தைத் தன் வெற்றிப் படங்கள் மூலம் உருவாக்கியவர். இதுவரை 200 திரைப்படங்களுக்கும் அதிகமாக நடித்துள்ளார். ஐந்து தேசிய விருதுகளை வென்றுள்ளார்.
கடைசியாக அமிதாப் பச்சன் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் 2024-ல் வெளியானது. 2025-ல் வெளியான 120 பகதூர் படத்தில் வாய்ஸ் ஓவர் அளித்திருந்தார். தற்போது, நடிகர் கமல் ஹாசனுடன் கல்கி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், அமிதாப் பச்சனின் 84-வது பிறந்த நாளான இன்று அவருக்குப் பலரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் கமல் ஹாசனும் வாழ்த்துப் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். இதில், “கம்பீரமான குரலை ஒரு அடையாளமாகவும் பேசும்போது விடும் இடைவெளியை நாடகத்தன்மை மிக்கதாகவும் புருவத்தை உயர்த்துவதைக்கூட கதையின் திருப்பமாகவும் மாற்றியவர்!
சாதாரணமான, “தேவியோன் அவுர் சஜ்ஜனோ” (பெண்களே, பெரியோர்களே) என்ற வார்த்தைகளைக்கூட அமிதாப் பச்சன் பிளாக்பஸ்டர் தொடக்கக் காட்சியைப் போல மாற்றிவிடுவார். அவர் எப்போதுமே தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர். ஆக்ரோஷமான இளைஞரே... பிறந்த நாள் வாழ்த்துகள்!” எனத் தெரிவித்துள்ளார்.
Actor Kamal Haasan has extended birthday wishes to actor Amitabh Bachchan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


