மின் தடை, ஒரு யூனிட் ரூ.35, தனியாரிடம் மின் கொள்முதல்! அமைச்சர் நிர்மல் குமாரிடம் சரமாரிக் கேள்விதிமுக ஆட்சியில் ரூ. 20-க்கு வாங்கப்பட்ட மின்சாரம், ரூ. 35-க்கு கொள்முதல்! செந்தில் பாலாஜிபள்ளிகளில் வாரத்தில் 5 நாள்களும் உடற்கல்வி வகுப்புகள்! ராஜ்மோகன் அறிவிப்புசி.வி. சண்முகம் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!6 எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா: பேரவைத் தலைவர் நடவடிக்கை செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம்!உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்தவர் சங்கரலிங்கனார்: முதல்வர் விஜய்உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்தவர் சங்கரலிங்கனார்: முதல்வர் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 குறைவுஜந்தர் மந்தரில் போராட முயன்ற சிஜேபினர் கைது!

ஹவுஸ்ஃபுல் ஆகும் ஜெயிலர் - 2... அசத்தல் முன்பதிவு!

ஜெயிலர் - 2 திரைப்படத்திற்கு டிக்கெட் விற்பனை தீவிரமடைந்துள்ளன...

நடிகர் ரஜினிகாந்த்

Published On :

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் - 2 திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் - 2 திரைப்படம் அக்டோபர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில், ரஜினியுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். முதல் பாகம் கொடுத்த பெரிய வெற்றியால் இரண்டாம் பாகம் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் முன்பதிவிற்கான ஆன்லைன் டிக்கெட்கள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் பெரும்பாலான திரைகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளால் டிக்கெட்கள் விற்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை முதல் ஞாயிறு வரை பல திரையரங்கங்களில் கிட்டத்தட்ட டிக்கெட்கள் முடியும் நிலையில் உள்ளன.

ஆச்சரியமாக, தமிழகம் மட்டுமல்லாது கேரளத்திலும் அதிகமான டிக்கெட்கள் விற்பனையாகி வருகின்றன. காரணம், இதில் நடிகர் மோகன்லாலும் நடித்திருக்கிறார் என்பதால் அவரின் ரசிகர்களும் முன்பதிவுகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இப்படம் நன்றாக இருந்தால் முதல் பாகத்தைப் போன்றே பெரிய வசூலைச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ticket bookings for the movie Jailer 2, starring actor Rajinikanth, are proceeding in full swing.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER