சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

மும்பையில் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச் சூடு!

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

டைகர் ஷெராஃப்

Updated On :

மும்பையின் ஜூஹு பகுதியில் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

பாலிவுட் டைகர் ஷெராஃப், மும்பை ஜூஹூவில் உள்ள புஷ்பா பூங்காவில் கால்பந்து விளையாடிவிட்டு காரில் சென்றபோது பைக்கில் வந்த 3 பேர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இந்தச் சம்பவத்தில் அவரது உதவியாளர்கள் இருவர் காயமடைந்ததாகக் கூறப்படும் நிலையில், டைகர் ஷெராஃப்புக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுடும் காணொலிகள் இணையத்தில் பரவியுள்ள நிலையில், அடையாளம் காணவும், தாக்குதலுக்கான காரணத்தைக் கண்டறியவும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பான விசாரணைக்கு 15 காவல்துறை குழுக்கள் தனியே அமைக்கப்பட்டுள்ளன.

இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒரு சமூக ஊடகப் பதிவு வைரலாகியுள்ளது.

அதில், "டைகர் ஷெராஃப் மீதான தாக்குதலுக்கு அனில் பண்டிட் மற்றும் ஹர்மன் சாந்து ஆகிய நாங்கள் முழுப் பொறுப்பேற்கிறோம். தொலைபேசி வாயிலாக அவரிடம் விஷயத்தை விளக்க முயன்றோம். ஆனால் அவர் புரிந்துகொள்ளவில்லை. எனவே, இன்று அவருக்கு நன்றாகப் புரியும் வகையில் செய்துகாட்டினோம். மும்பை திரையுலகில் எங்கள் பேச்சைக் கேட்க மறுத்து சல்மான் கானுடன் இணைந்து பணியாற்றத் துணிபவர்கள் எங்களின் அடுத்த இலக்காக இருப்பார்கள். பொறுத்திருந்து பாருங்கள்” எனத் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பதிவை சமூக ஊடகத்தில் வெளியிட்ட கணக்கு சில நிமிடங்களில் அழிக்கப்பட்டது. இருப்பினும், அந்தப் பதிவின் நம்பகத்தன்மையை பற்றி மும்பை காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த நடிகரின் உதவியாளர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

இந்தச் சம்பவத்திற்கு மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கண்டனம் தெரிவித்துள்ளார். ”மும்பையில் கும்பல் மோதல்கள் இனியும் பொறுத்துக்கொள்ளப்படாது. இதில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அவர் கூறியுள்ளார்.

மும்பை காங்கிரஸ் தலைவர் இதுபற்றிப் பேசுகையில், “பாபா சித்திக் கொலை, சல்மான் கானின் வீட்டில் நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் ஏராளமான நடிகர்கள், தயாரிப்பாளர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் என மும்பையில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. முதல்வர் ஃபட்னவீஸ் இதில் முற்றிலுமாக தோல்வியடைந்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

Unidentified individuals have opened fire on Bollywood actor Tiger Shroff.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.