

'ஒரு ஆதார் லவ்' படத்தில் பாடல் காட்சியில் புருவங்களை உயர்த்தி நடித்து பரபரப்பை ஏற்படுத்தி புகழ்பெற்ற ப்ரியா பிரகாஷ் வாரியர், முதன்முறையாக ஒரு விளம்பர படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதுவரை எந்த புதுமுகத்துக்கும் கொடுக்காத தொகையாக இவருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறதாம். இது தவிர பாலிவுட்டில் ரண்வீர் கபூருடன் 'சிம்பா'வில் நடிக்க போவதாக வந்த தகவல், வதந்தி என்றும், ஆனால் வேறொரு இந்தி படத்தில் நடிக்க ப்ரியா ஒப்பந்தமாகியிருப்பதாகவும், இது பற்றிய தகவல் விரைவில் வெளியாகுமென்றும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.