நீண்ட காலமாக (நான்கு ஆண்டுகள்) காதலித்து வரும் தீபிகா படுகோன் ரன்வீர் சிங் ஜோடி விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார்கள் என்ற தகவல் பாலிவுட் மீடியாக்களில் வலம் வந்து கொண்டிருந்த நிலையில், அண்மையில் அவர்களின் திருமண தேதி வெளியானது. நவம்பர் 20-ம் தேதி தீபிகா-ரன்வீர் திருமணம் எளிமையாக நடைபெறவுள்ளது.
விராட் கோலி அனுஷ்கா ஷர்மாவின் திருமணத்தைப் போல இவர்களுடைய திருமணமும் நெருங்கிய சொந்த பந்தங்கள் மற்றும் நட்புக்களுடன் மட்டும் நடைபெறவிருக்கிறதாம்.
தங்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக இல்லாமல் நெருக்கமான உறவுகளுக்கு மத்தியில் அமைதியாகவும் எளிமையாகவும் இருக்க வேண்டும் என்று இந்த ஜோடி விரும்புகிறது. மேலும் திருமணத்துக்கு வருவோர் மொபைல் போன்களை எடுத்து வரக் கூடாது என்றும் அன்புக் கட்டளை போட்டுள்ளனராம்.
தீபிகா-ரன்வீர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியைச் குறித்த அதிகாரபூர்வமான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.