உலகின் மிக அழகான 25 பெண்கள்! (படங்கள்)

உலகின் மிக அழகான பெண்களின் பட்டியல்...
உலகின் மிக அழகான 25 பெண்கள்! (படங்கள்)

அழகு எது என்பதற்கே ஆயிரம் வரையறைகள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று அழகு. அழகான பெண்கள் யார் யார் என்றால் நிச்சயம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பட்டியல் தருவார்கள். உலகின் மிக அழகான பெண்களின் பட்டியல் ஒன்றை இணைய இதழான Easy Voyage  வெளியிட்டிருக்கிறது. அழகுப் பெண்கள்தான் இவர்கள். இவர்களில் இந்தியப் பெண்கள் மூவர் என்பது கூடுதல் சிறப்பு!

1. மொஸ்தா ஜமால்ஸடா (Mozhdah Jamalzadah)

34 வயதுப் பாடகி. ஆப்கானிஸ்தானில் போர்ச்சூழல் இருந்ததால் மொஸ்தாவுக்கு 5 வயது இருக்கும்போது, ஆப்கானிஸ்தானில் இருந்து கனடாவுக்குக் குடியேறியது மொஸ்தா குடும்பம். அங்குதான் இசை மீதான தனது ஆர்வத்தைக் கண்டுகொண்டார் மொஸ்தா. ஆப்கான் கேர்ள் என்கிற பாடல் மூலம் சர்வதேசக் கவனம் பெற்றார். கனடாவில் இவருடைய ஆல்பம் அதிகளவில் விற்பனையாகி நட்சத்திரமானார். படத்தில் நடிக்கத் தொடங்கியதோடு தன்னுடைய வாழ்க்கை வரலாறு நூலையும் வெளியிட்டுள்ளார். 

2. அலிசியா விகண்டர் (Alicia Vikander) 

(படம் - https://www.instagram.com/aliciavikanderdaily/)
(படம் - https://www.instagram.com/aliciavikanderdaily/)

ஸ்வீடனைச் சேர்ந்த 31 வயது நடிகை. குறும்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் ஆரம்பத்தில் நடித்துவந்தார். 2010 முதல் படங்களில் நடிக்கிறார். Testament of Youth என்கிற படத்தின் மூலம் சர்வதேசக் கவனம் பெற்றார். தி டேனிஷ் கேர்ள் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றார். 

3. டரனே அலிடூஸ்டி (Taraneh Alidoosti)

36 வயது. ஈரானின் சிறந்த நடிகையாக மதிக்கப்படுபவர். அழகும் நடிப்பும் இவருக்கு ஏராளமான ரசிகர்களைக் கொடுத்துள்ளன. 

4. நவோமி கேம்பல் (Naomi Campbell)

இங்கிலாந்தைச் சேர்ந்த 49 வயது மாடல். ஃபேஷன் துறையினரால் சூப்பர் மாடல் என்கிற கெளரவத்தை அடைந்தவர். படங்கள், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். 

5. அன்னே கர்டிஸ் (Anne Curtis)

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 35 வயது நடிகை, தொலைக்காட்சித் தொகுப்பாளர். 1997 முதல் படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார். 

6. மேனுயுலா அர்குரி (Manuela Arcuri)

ராணி போல தோற்றம் கொண்ட நடிகை. மாடலாகவும் நடிகையாகவும் உள்ளவர். 42 வயது. பார்த்தால் அப்படியா தெரிகிறது?

7. ஐஸ்வர்யா ராய்

காலத்தால் அழியாத அழகு. உலக அரங்கில் இந்திய அழகிகளுக்குப் பெருமை சேர்த்தவர். இன்றைக்கும் மிகச்சிறந்த அழகிகள் பட்டியலில் இடம்பெறுபவர். 

8. ஹைஃபா வெஹ்பி (Haifa Wehbe)

47 வயது லெபனான் பாடகி. 14 வருடங்களுக்கு முன்பு, பியூப்பில் பத்திரிகை வெளியிட்ட உலகின் 50 அழகிகள் பட்டியலில் ஒருவராக இடம்பிடித்தார். 2 படங்களிலும் நடித்துள்ளார்.

9. அட்ரியனா லிமா (Adriana Lima)

38 வயது பிரேஸில் மாடல் & நடிகை. பெண்கள் ஆடை நிறுவனமான விக்டோரியாஸ் சீக்ரெட் நிறுவனத்தின் பிரபல மாடலாக, தேவதையாக நீண்ட காலம் இருந்தார். இந்நிறுவனத்தின் ஃபேஷன் ஷோக்களில் அதிக தடவை கலந்து கொண்டவர். 

10. பிளேக் லைவ்லி (Blake Lively)

32 வயது அமெரிக்க நடிகை. மூன்று குழந்தைகளுக்குத் தாய். 

11. கால் கடோட் (Gal Gadot)

34 வயது. மிஸ் இஸ்ரேல் பட்டம் வென்றபிறகு இஸ்ரேலிய இராணுவத்தில் இரு வருடங்கள் பணியாற்றினார். இதன்பிறகுதான் நடிகையாக தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டார். ஃபாஸ் அண்ட் ஃபியூரியஸ் மற்றும் வொண்டர் வுமன் படங்களில் நடித்து சர்வதேசப் புகழை அடைந்தார். அதிகச் சம்பளம் வாங்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். 

12. ஆஷ்லி கிரஹாம் (Ashley Graham)

32 வயது அமெரிக்க மாடல் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர். ப்ளஸ் சைஸ் மாடல்களில் மிகவும் புகழ்பெற்றவர். பல்வேறு பத்திரிகைகளின் அட்டைப்படங்களில் இடம்பெற்றவர். 

13. நிகி கரிமி (Niki Karimi)

கவர்ச்சி காண்பிக்காமலேயே அழகை வெளிப்படுத்த முடியும் என்று நிரூபிப்பவர். 48 வயது ஈரானிய நடிகை, இயக்குநர். இவர் இயக்கிய 5 படங்களும் பட விழாக்களில் கலந்துகொண்டுள்ளன. 

14. கிகி ஹடிட் (Gigi Hadid)

2016-ல் சர்வதேச மாடலாகப் பெயர் பெற்றவர். 24 வயது. பிரபலமான வோக் பத்திரிகையின் அட்டைப் படங்களில் 35 தடவை இடம்பெற்றவர்.

15. எம்மா ஸ்டோன் ( Emma Stone)

(படம் - https://www.instagram.com/_emmastoneofficial_/)
(படம் - https://www.instagram.com/_emmastoneofficial_/)

லா லா லேண்ட் படத்துக்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது பெற்றவர். 31 வயது. 2017-ல் உலகின் அதிகச் சம்பளம் வாங்கும் நடிகையாகப் பெயர் பெற்றார். 

16. பியா வுர்ட்ஸ்பக் (Pia Wurtzbach)

மிஸ் யுனிவர்ஸ் 2015. ஜெர்மனியில் பிறந்து பிலிப்பைன்ஸில் வளர்ந்தவர். 30 வயது. நடிகை, மாடல், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பல முகங்கள் கொண்டவர். 

17. அலெக்ஸாண்ட்ரா டாட்டரியோ (Alexandra Daddario)

கண்களால் கைது செய்பவர். 33 வயது அமெரிக்கப் பெண். 2005 முதல் படங்களில் நடித்து வருகிறார். 

18. ஃபஹ்ரிய எவ்சென் (Fahriye Evcen)

33 வயது துருக்கிய நடிகை. ஜெர்மனியில் பிறந்தவர். 2017-ல் உலகின் சிறந்த 30 அழகிகளில் ஒருவராகக் குறிப்பிடப்பட்டார். 

19. ஏஞ்சலினா ஜோலி (Angelina Jolie)

(படம் - www.facebook.com/angelinajoliebr)
(படம் - www.facebook.com/angelinajoliebr)

உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை. 44 வயது. அதிகச் சம்பளம் வாங்கும் நடிகையாகப் பலமுறை குறிப்பிடப்பட்டவர். சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை 2000-ம் ஆண்டு பெற்றார். 

20. மார்கோட் ராபி ( Margot Robbie)

ஆஸ்திரேலிய நடிகை. 29 வயது. அதிகச் சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவர் எனப் பெயர் பெற்றவர். 2 முறை சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். 

21. தீபிகா படுகோன்

34 வயது இந்திய அழகி. இந்திய நடிகைகளில் அதிகச் சம்பளம் பெறுபவர். கன்னடப் படத்தில் அறிமுகமாகி, 2007-ல் பாலிவுட்டில் நுழைந்த பிறகு இந்தியாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக மாறினார். சர்வதேச அளவில் புகழ்பெற்ற வெகுசில இந்திய நடிகைகளில் ஒருவர். 

22. டகோடா ஜான்சன் ( Dakota Johnson)

(படம் - www.facebook.com/dakotaajohnsonn)
(படம் - www.facebook.com/dakotaajohnsonn)

ஃபிஃப்டி ஷேட்ஸ் ஆப் கிரே படம் பார்த்தவர்களுக்கு இவரைத் தெரியும். இப்படத்தின் மூலம் அதிகக் கவனம் பெற்றவர். 30 வயது.

23. எம்மா வாட்சன் (Emma Watson)

ஹாரி பாட்டர் படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். 29 வயது. 

24. பியான்சே (Beyoncé)

உலகப் புகழ்பெற்ற பாடகி. 38 வயது. கிராமி விருதுகளில் அதிக தடவை பரிந்துரைக்கப்பட்ட பாடகி. அதிக தடவை எம்டிவி விருதுகளையும் அள்ளியவர். 

25. பிரியங்கா சோப்ரா

2000-ம் ஆண்டு உலக அழகி. 37 வயது. சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பத்மஸ்ரீ விருதும் பெற்றவர். 2002-ல் தமிழன் படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமானவர், சர்வதேச நடிகையாக உலக அளவில் புகழ்பெற்றுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.