அரசு மருத்துவமனைகளில் சீா்கேடுகள்: தீா்வு காண 304 சிறப்பு அதிகாரிகள் நியமனம்சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2029-இல் நிறைவடையும்: தேசிய நெடுச்சாலை ஆணையம்தமிழகத்துக்கு 19 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை: திருச்சி முதலிடம்அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்
/

விஜய் பிறந்த நாள் விழாவில்...

முதல்வர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி... விஜய் பிறந்த நாள் விழாவில்...

News image

திருமணம் செய்து வைக்கப்பட்ட மணமக்களுடன் விஜய். - (தினமணி கருவூலத்திலிருந்து...)

Updated On :19 ஜூன் 2026, 3:29 pm IST

விஜய் தன் பிறந்த நாளன்று (22.06.01) கீழ்ப்பாக்கத்தில் உள்ள மெர்சி ஹோம், அடையாறில் உள்ள அன்புக்கரங்கள், ராஜா அண்ணாமலை புரத்திலுள்ள அனாதை இல்லமான ஆர்தோ பெட்டிக், ஜெமினி மேம்பாலம் அருகிலுள்ள லிட்டில் பிளவர் கண், காது கேளாதோர் பள்ளி, வண்ணாரப்பேட்டையிலுள்ள பாஸ்டிக் சொஸைட்டி போன்ற இடங்களுக்குச் சென்று அங்குள்ளவர்களுக்கு உணவு வழங்கினார்.

பிறந்தநாள் பரிசாக டைரக்டரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகரன் விஜய்க்கு மெட்டாலிக் கோல்டு லான்சர் கார் பரிசாகக் கொடுத்தார். பிறந்த நாளை முன்னிட்டு தன் தாயின் பெயரில் தொடங்கப்பட்ட 'ஷோபனம்' திருமண மண்டபத்தில் ஒன்பது ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார் விஜய்.

Story image

தாலி உள்பட 51 வகையான சீர்வரிசையை அவர்களுக்குச் செய்ததுடன், மணமக்கள், மணமக்களின் பெற்றோர் உறவினருடன் விருந்து உண்டார்.

அப்போது விஜய் பேசுகையில், “ஒன்பது கல்யாணம்னா 18 குடும்பம்- அந்த பதினெட்டு மணமக்களுடைய பெற்றோர்கள் உறவினர்கள் வாழ்த்தும்போது கிடைக்கிற மனநிறைவுக்கு எதுவுமே ஈடாகாது. உங்க ஊக்கத்தினாலே அடுத்த வருஷம் ரெண்டு மடங்காக அதிகமாக்கணும்ங்கிறது என் ஆசை” என்றார்.

மணமக்களின் பெற்றோர் விஜய்யை மனமாற அன்று வாழ்த்தினர். ஏழை மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் இரண்டு லட்சம் நோட் டுப் புத்தகங்களைப் பிறந்த நாளை முன்னிட்டு வழங்கினார்.

விஜய் ரசிகர் மன்றம் மூலமாக ஒவ்வொரு ஸ்கூலுக்கும் போய் அதனை வினியோகிக்க முறைப்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக 14 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இவை தவிர 27 மாணவ மாணவிகளுக்கான முழுப் படிப்புச் செலவையும் விஜய்யே ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

“என் பிறந்தநாள் பலருக்கும் பயன்படும் தினமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஒவ்வொரு ரசிகரும் அவங்க பிறந்த நாளா நினைச்சு புது டிரஸ் போட்டு பட்டாசு வைத்து வெடித்துக் கொண்டாடுறாங்க. அவங்களுக்கு நானும் நல்லது செய்யணும்னு விரும்பியதன் விளைவு இது. இன்னும் நிறைய செய்ய விருப்பப்படறேன்...” என்றார் விஜய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.