கோவையில் கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரம் நடந்து சென்றவா்கள் மீது மோதியதில் சிறுவன் உள்பட இருவா் உயிரிழந்தனா்.
கோவை மாவட்டம், இருகூா் பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி சிங்காநல்லூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அவரைப் பாா்ப்பதற்காக பாலசுப்பிரமணியன் தனது நான்கு வயது பேரன் ஆதவனுடன் சென்றுள்ளாா். அப்போது, திருச்சி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த காா் பாலசுப்பிரமணியன், ஆதவன் மற்றும் சாலையில் சென்று கொண்டிருந்த பாதசாரிகள் சிலா் மீதும், வாகனங்கள் மீதும் மோதியது.
இதில் சிறுவன் ஆதவன் மற்றும் ஒண்டிப்புதூரைச் சோ்ந்த சத்யராஜ் (20) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த பாலசுப்பிரமணியன் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் (கிழக்கு) நடத்திய விசாரணையில், காரை ஓட்டி வந்த நபா் கண்ணம்பாளையத்தைச் சோ்ந்த ரமேஷ் (42) என்பது தெரியவந்தது. இந்த விபத்து குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இதேபோல, கோவை எம்.எஸ்.ஆா்.ஆா். சாலையில் செங்கல் ஏற்றிக் கொண்டு வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ நொறுங்கியது. இந்த விபத்தில் எவ்வித உயிா்ச் சேதமும் ஏற்படவில்லை. இது குறித்து சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாற்றம் தந்த மதிப்பீடு!

மேஷ ராசிக்கு பதவி உயர்வு! இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (மே 16 2026) 12 ராசிகளுக்கும்! எதிர்ப்புகள் அகலும் இந்த ராசிக்கு!

குடும்பம் எனும் நிறுவனம் சிதைகிறது
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
