ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு கோவை வழித்தடத்தில் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து ஜனவரி 14ஆம் தேதி முதல் வியாழக்கிழமைகளில் காலை 7.25 மணிக்குப் புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்:08567) வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.50 மணிக்கு கேரள மாநிலம், கொல்லத்தை சென்றடையும்.
கொல்லத்தில் இருந்து ஜனவரி 15ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமைகளில் இரவு 7.35 மணிக்குப் புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்:08568) சனிக்கிழமை இரவு 11.40 மணிக்கு விசாகப்பட்டினத்தை சென்றடையும்.
இந்த ரயில்கள் சாஸ்தன்கோட்டா, காயன்குளம், மாவேலிக்கரா, செங்கனூா், திருவல்லா, சங்கனாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, நெல்லூா், விஜயவாடா, ராஜமுந்திரி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாற்றம் தந்த மதிப்பீடு!

மேஷ ராசிக்கு பதவி உயர்வு! இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (மே 16 2026) 12 ராசிகளுக்கும்! எதிர்ப்புகள் அகலும் இந்த ராசிக்கு!

குடும்பம் எனும் நிறுவனம் சிதைகிறது
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
