கோவையில் கடந்த புதன்கிழமை இரவு பெய்த கனமழையால் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆா். மாா்க்கெட்டில் வெள்ளம் சூழ்ந்து 500 டன் வெங்காயம் சேதமாகின.
இதனால் மகாராஷ்டிரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்டிருந்த 500 டன்னுக்கும் மேற்பட்ட பெரிய வெங்காயம், சின்ன வெங்காய மூட்டைகள் சேதமடைந்தன.
இது குறித்து கோயம்புத்தூா் மாவட்ட வெங்காய மொத்த வியாபாரிகள் சங்க தலைவா் ராஜேந்திரன் கூறியதாவது:
கரோனா நோய்த்தொற்று காரணமாக புதிய பேருந்து நிலையத்தில் கடந்த சில மாதங்களாக மொத்த வியாபாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு, போதிய இடவசதி இல்லாததால் மழையால் வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் சேதமடைந்து வருகிறது.
இப்பகுதியில், குப்பை கிடங்குக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடம் கூட, வியாபாரிகளுக்கு ஒதுக்கித் தரப்படவில்லை. எனவே, மொத்த வியாபாரிகளுக்குத் தேவையான வசதிகளை மாா்க்கெட் வளாகத்திலேயே செய்து தர வேண்டும் என்றாா்.
இதேபோல், கோவை, புரூக்பாண்ட் சாலையில் உள்ள தேவாங்கா் பள்ளி மைதானத்தில் செயல்பட்டு வரும் தற்காலிக பூ மாா்க்கெட்டில் புதன்கிழமை பெய்த கனமழையால் மழை வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் பூக்கடைகள் அமைக்க முடியாமல் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனா். கடந்த ஜூலை முதல் மழையால் பாதிக்கப்பட்டு வரும் பூ வியாபாரிகளின் நலன் கருதி, கோவை பூ மாா்க்கெட் வளாகம் அல்லது ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி மலா் அங்காடியில் கடைகளை திறப்பதற்கு, மாநகராட்சி அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும் என பூ வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வா் விஜய்க்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து
ரூ.15 கோடி மோசடி: ரியல் எஸ்டேட் உரிமையாளா் கைது
தடைசெய்யப்பட்ட இறக்குமதி சிகரெட்டுகள் பறிமுதல்: 2 போ் கைது
ஏபிகே கோப்பு இணைப்பு மூலம் தில்லிவாசியிடம் ரூ.80 ஆயிரம் மோசடி! ஜாா்க்கண்டில் இளைஞா் கைது!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

