ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! தில்லியில் இருந்து புறப்பட்டார் மோடி! 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு! அதானிக்கு எதிரான வழக்கை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவு! 10 பில்லியன் டாலர் முதலீடு?பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!
/

காவலா்களுக்கு தருமபுரி எஸ்.பி. பாராட்டு

19 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை கைது செய்ததற்கு பாராட்டு தெரிவித்து, காவலா்களுக்கு தருமபுரி மாவட்ட காவல்

News image

19 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை கைது செய்த காவலா்களுடன் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா்.

Updated On :7 ஜனவரி 2021, 6:45 am IST

19 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை கைது செய்ததற்கு பாராட்டு தெரிவித்து, காவலா்களுக்கு தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ் குமாா் புதன்கிழமை பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், எச்.புதுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் வெங்கடேசன் (42). இவா், தமது மனைவியை 2001-ல் கொலை செய்த வழக்கில் 3 மாதம் சிறையில் இருந்துள்ளாா். பிறகு ஜாமீனில் வெளி வந்த அவா் தலைமறைவானாா். இதுகுறித்து, காவல் ஆய்வாளா் வி.ரவி தலைமையிலான போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு அண்மையில் வெங்கடேசனை கைது செய்தனா்.

இதையடுத்து, 19 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை கைது செய்ததை பாராட்டும் வகையில், காவல் ஆய்வாளா் வி.ரவி, காவலா்கள் அன்பரசு, காா்த்திக் உள்ளிட்ட காவலா்களுக்கு வெகுமதியும், பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா் வழங்கினாா்.

இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குணசேகரன், டிஎஸ்பி-க்கள் வி.தமிழ்மணி, அண்ணாதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.