விடுமுறையில் இயங்கும் கல்வி நிறுவனங்கள்
அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், தனியார் கல்லூரிகள் போன்றவற்றில் சாதாரண வேலைநாள்களில் நிர்வாகத்தின் விருப்பத்திற்கு ஏற்ப விடுமுறை வழங்கிவிடுகின்றனர். பின்னர், தாங்கள் மாணவர்கள் நலனுக்காகக்


அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், தனியார் கல்லூரிகள் போன்றவற்றில் சாதாரண வேலைநாள்களில் நிர்வாகத்தின் விருப்பத்திற்கு ஏற்ப விடுமுறை வழங்கிவிடுகின்றனர். பின்னர், தாங்கள் மாணவர்கள் நலனுக்காகக் கடினமாக உழைப்பதுபோல காட்டிக்கொள்வதற்காக, அரசு விடுமுறை தினங்களில் பள்ளி, கல்லூரிகளை இயக்குவது, மாணவர்கள் மத்தியில் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது.
அரசுப் பள்ளி, கல்லூரிகளில் பெரும்பாலும், அரசு விடுமுறை தினங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் வகுப்புகள் செயல்படுவதில்லை.
10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு மட்டும் ஒரு சில பள்ளிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகளை நடத்துகின்றனர்.
இதுவே மாணவர்களை இயந்திரத்தனமாக நடத்தப்படும் சூழல் என சமூக ஆர்வலர்கள் குறை கூறிவரும் சூழ்நிலையில், ஒரு சில அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், தனியார் கல்லூரிகள், முக்கிய பண்டிகை தினங்களில் வரும் அரசு விடுமுறை தினங்களில் பள்ளி, கல்லூரிகளை நடத்துகின்றனர்.
மாணவர்கள் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதுபோல இவர்கள் காட்டிக் கொண்டாலும், குறிப்பிட்ட மத பண்டிகை தினங்களில் வரும் அரசு விடுமுறை தினங்களில் மட்டுமே வகுப்புகள் நடத்துவது பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
சாதாரண வகுப்புகள் என்றால் மாணவர்கள் வரமாட்டார்கள் என தெரிந்துக் கொள்ளும் பள்ளி நிர்வாகம், மாதிரித் தேர்வு எனக் கூறி கண்டிப்பாக வரவேண்டும். இல்லையெனில் ரூ.100 அபராதம் என தெரிவிக்கின்றன.
இதனால் அச்சப்படும் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு வந்தாலும் படிப்பதில் ஆர்வம் குறைகிறது.
குறிப்பாக, அரசு விடுமுறை தினங்களான குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகியன தவிர, பிற தினங்கள் முக்கிய பண்டிகை தினங்களாக இருக்கும். அந்தந்த மத வழிபாட்டு மீது நம்பிக்கை கொண்டவர்கள், குடும்பத்துடன் அத்தகைய தினங்களைச் சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம்.
அத்தகைய நாள்களில் பள்ளி, கல்லூரிகளில் வேலை நாள்களாக வைக்கும்போது, மாணவர்கள் மனது முழுவதும் அத்தகைய விசேஷ தினங்களைப் பற்றியோ, குடும்பத்தினர் செல்லும் கோயில், குளங்கள் பற்றிய சிந்தனையிலோதான் இருக்கும். இப்படிப்பட்ட சூழலில், இவர்கள் பள்ளி, கல்லூரி வந்தாலும்கூட எதுவுமே புரியப்போவது இல்லை.
அண்மையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி ஒன்றில் தமிழ்வருடப் பிறப்பு மற்றும் சித்திரைவிஷுவை முன்னிட்டு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுஇருந்தும் கல்லூரியில் மாதிரித் தேர்வு நடைபெறுகிறது என்ற பெயரில் கல்லூரி இயக்கப்பட்டது மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இத்தகைய சூழல் எங்கெல்லாம் உள்ளது என்பது குறித்து கல்வித்துறை ஆய்வு செய்ய வேண்டும். இத்தகைய செயலில் ஈடுபடும் பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவர்களைப் படிக்கும் காலத்திலேயே சாதி, மத வேறுபாட்டை ஏற்படுத்தாமல், சிறந்த சமூக சிந்தனை உள்ளவர்களாக உருவாக்கப் பாடுபட வேண்டும்.
மாணவர்கள் மனது முழுவதும் அத்தகைய
விசேஷ தினங்களைப் பற்றியோ, குடும்பத்தினர் செல்லும் கோவில், குளங்கள் பற்றிய சிந்தனையிலோதான் இருக்கும்.
இப்படிப்பட்ட சூழலில், இவர்கள் பள்ளி, கல்லூரி
வந்தாலும்கூட எதுவுமே புரியப்போவது இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...